0
Image result for வகுப்பறை
"சிற்பியை போல என் இதயத்தை செதுக்கினால்,
உளி கொண்டு அல்ல...
அவன் அழகான விழி கொண்டு..!!! "

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய  "டிங்கு டைரி - 6 என்ன கிபிட் அது"

விடுமுறைக்குச் சென்ற ஹேமா திரும்பி வரவில்லை வேறு ஒரு ஊருக்குக் குடிபோய் விட்டதாக என் அம்மா மூலமாகத் தகவல் தெரிந்தது. அவளைப் பிரிந்த சோகத்திலேயே மூன்று வருடங்கள் ஓடின. நான் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் படிப்படியாகக் கடைசி ரேங்கு வந்துவிட்டேன். பக்கத்தில் இருந்த சாமிநாதனையும் அடுத்த பெஞ்சிக்கு மாற்றிவிட்டனர். 

எட்டாம் வகுப்பில் எங்க தமிழ் ஆசிரியரைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும், மாணவர்களிடம் மிகவும் அன்பானவர், எங்கள் வகுப்பு ஆசிரியரும் அவரே, மாணவர்கள் குணம் அறிந்து செயல்படுவார், மாணவர்கள் என்ன லூட்டி பண்ணினாலும் பொறுமையாக இருப்பார். அதனாலேயே மாணவர்கள் மத்தியில் அவருக்கு அதிக மதிப்பும் மரியாதையும் இருந்தது. 
 Image result for குல்லா குரங்கு கதை

வகுப்புபில் மும்முரமாகத் தொப்பி விற்பவன் தமிழ் பாடம் நடந்து கொண்டிருந்தது. வகுப்பில் இரண்டாம் பெஞ்சில் இருந்த அனித்தா ஆசிரியருக்குத் தெரியாமல் தேன் மிட்டய சுவைத்துக் கொண்டிருந்தால். எங்கள் வகுப்பில் புதுசாக ஒரு பொண்ணு சேர்ந்திருந்தால் அவள் தான் கிருத்திகா மும்மரமாகப் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள், நடு பெஞ்சில் இருந்தவள் பெஞ்சிக்கு கீழே அடுத்த வகுப்புக்கான வீட்டுப் பாடத்தை எழுதிக் கொண்டிருந்தார்கள், கடைசி பெஞ்சில் ஒருவன் ரப்பர் பேண்ட் வில்லில் காயித உருண்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தவன் மறுமுனையை நோக்கிக் குறிவைத்தான், நல்லா தூங்கீட்டு இருந்தவன் நெத்திமேல இலக்கு இருந்தது, தூங்குறது எப்பவும் ஹீரோவாதான் இருக்கனுமா.


தன் கன்னத்தில் கடித்த கொசுவ அடித்தவாறு நல்லா தூங்கிட்டு இருந்தான் சாமிநாதன். அவன் நெத்திமேல் வைத்த இலக்கை நான் நிலைநிறுத்தினேன், ஆசிரியர் பாடத்தின் கடைசி பகுதிக்கு வந்தார் “குல்லா விற்பவர் தன் தலையில் இருந்த தன் குல்லாவை எடுத்து வீசினார் என்று சொல்லவும் நான் இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த ரப்பர் பேண்டை விடவும் காயித உருண்டை சாமிநாதனின் நெற்றியைப் பதம் பார்த்தது. அவன் விழுக்கென எழுந்து என்னைப் பார்த்தவாறு “இது தான் உனக்குக் கடைசி" என சத்தம்போட்டு விட்டேன். ஆசிரியை அவனை  நோக்கி 

தமிழாசிரியர் : சாமிநாதா .. மறுபடியும் அவன்கூட சண்டையா? இல்ல ஏதாவது கனவு கண்டையா?

சாமிநாதன் : இல்லிங்க ஐயா, இவன்தான் என அவன் பார்வையை என்மீது திருப்பினான். 

அனைவரும் சிரிக்க. ஆசிரியார் என்ன சிரிப்பு என அனைவரையும் அதட்ட வகுப்பு அமைதியானது. சாமிநாதனை உட்கார் என சொல்லிவிட்டார்.

தமிழாசிரியர் : பிரபு நீ எந்திரி..  இதுக்கு விடைய சொல்லு
1 வீசிய குல்லாவை குரங்கு எடுத்தது
2 குரங்குகள் எடுத்த குல்லாக்களை வீசியது
3 குரங்கு எதுவும் செய்யவில்லை 

நான் : 2 குரங்குகள் எடுத்த குல்லாக்களை வீசியது

தமிழாசிரியர் : 2ணு எப்படி சொல்லுற?  

நான் : நம்ம எது செய்யுரமோ அத தான் குரங்கும் செய்யும் ஐயா.

தமிழாசிரியர் : வாயடைத்துப் போனார்.. எப்படி சரியா சொன்னான். எப்பவும் திருதிருன்னு முழிப்பான். என்னை உட்கார சொன்னார். 

ஆசிரியர் திரும்பியதும் சாமிநாதன் தன்னிடம் இருந்த ரப்பர்பந்தை என் மேல் வீசினான் அதை லாகவமாக பிடித்துவிட்டேன். வகுப்பு முடிந்ததும் எனக்கும் சாமிநாதனுக்கும் சண்டை தொடங்கியது. அந்த சண்டைக்கு அனித்தாவும் கோபாலும்தான் நடுவர்கள். 

Image result for wwf play cards

அனித்தா : வெய்ட்டு 252 பவுண்ட், 10 வருஷம் 

நான் : ஸ்டோன் கோல்ட்

அனித்தா : கரைக்ட்.. இந்த கார்டு டிங்குக்கு.. 

கோபால் : வெய்ட்டு 260 பவுண்ட், 10 வருஷம், ஸ்டைல் 33,

சாமிநாதன் : சிறிது யோசித்தவாறு "ராக்"

 கோபால் : கரக்ட்.. இந்த கார்டு சாமிக்கு .. 

அனித்தா : வெய்ட்டு 275 பவுண்ட், 21 வருஷம்

சாமிநாதன் : ராக் 

அனித்தா : தப்பு 

நான் : ஹுல்கஹான் 

அனித்தா : கரக்ட்.. இந்த கார்டு டிங்குக்கு.. 

கோபால் : வெய்ட்டு 275 பவுண்ட், 1 வருஷம், ஸ்டைல் 32,

நான் : பாபி லாச்லி 

 
கோபால் : கரக்ட்.. இந்த கார்டு டிங்குக்கு..  

படிப்படியாக அனைத்து கார்டுகளையும் நான் ஜெய்தேன்.. சாமிநாதன் தோற்றான் 

நான் : ஆட்டம் முடுஞ்சுது இன்னிக்கும் நீ தோத்துட்ட என் ஹோம்வொர்கையும் நீ தான் செய்யனும். 

சாமிநாதன் : ஒவ்வொருதடவையும் நான் ஜெக்கவரும்போது நீ ஆட்டத்த போங்கு பண்ணுற.   

நான் : நீ மறுபடியும் தோத்தது அழுகக் கூடாதுனுதான் நான் ஆட்டத்த முடிக்கிறேன்.. உன்கிட்ட இப்ப ஒரு பெரிய கார்டும் இல்லை..

சாமிநாதன் : யாருசொன்னா... இந்த கார்ட பாத்தே நீ தான் அழுவ என தன்னிடம் இருந்த ஒரு கார்டை நீட்டினான். 

"கிசுகிசு கடிதம் " அடுத்த பகுதி .........    

அப்படி எந்த கார்ட வச்சிருப்பான்?  டிங்கு எழுதுன காதல் கடிதமா?


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ரகசியமாய் புதைத்து வைத்த உன் நினைவுகளுடன் உறங்க சென்றேன்
கனவுகளாய் முளைத்தாய்
மறைந்திருக்கும் அர்த்தங்களை  திறக்கச் சொல்கிறது
உன் விழிகள்"


கருத்துரையிடுக Disqus

 
Top