0
காந்தப்புலம் (Magenetic Field) என்பது விண்வெளியில் உள்ள ஏதேனும் ஒரு விண்வெளி பொருளை சுற்றி காணப்படும் பிரதேசமாகும், இப்பிரதேசத்தின் மின்னூட்டத் துகள்களை (Charged Particles) பயன்படுத்தி விண்வெளி பொருளால் தன்னகத்தே ஈர்க்கப்பட்டு அவ்வான் பொருளின் காந்தப்புலத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இந்த காந்தபுல பிரதேசமானது விண்வெளியின் அருகாமையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வெளியிடப்படும் பிளாஸ்மா கதிரினால் காந்தப்புலக்கோடுகள் மின் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகலாம். குறிப்பாக பூமியின் காந்தப்புலமானது சூரியப்புயல் போன்றவைகளிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றது. அப்படியான, பூமியின் காந்தப்புலம் 'செயலிழந்தது' என்று சதியாலோசனை கோட்பாட்டு ஒன்று வெளியாகி பீதியை கிளப்பி உள்ளது. 

Siyk9to.jpg

செயல்படவில்லை :

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பூமியின் காந்தப்புலம் செயல்படவில்லை என்றும் இது பூமி கிரக இறப்பின் ஆரம்பம் என்றும் தகவல்கள் வெளியாகின. 

GV7GzM8.jpg

பூமி கிரகம் :

பூமியின் காந்தப்புலம் தான் நம்மை சூரிய காற்று மற்றும் அதிகப்படியான கதிர்வீச்சு போன்றவைகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொண்டிருக்கிறது. அது செயல் இழந்தால் அல்லது தகர்ந்து போனால் பூமி கிரகம் பெரிய அளவிலான தாக்கத்தை எதிர்கொள்ளும். 

fxNNgLT.jpg

காரணம் :

செவ்வாய் கிரகம் மிகவும் மோசமான வறண்ட கிரகமாக இருக்க சூரியப்புயல் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது, காந்த புலம் இல்லையெனில் பூமிக்கும் அதே நிலை ஏற்படலாம். 



AqUTaig.jpg

வானிலை கணிப்பு மைய தரவுகள் :

நாசாவின் வானிலை கணிப்பு மைய தரவுகள், கடந்த 23 ஆம் தேதி 6.37 ஜிஎம்டி முதல் 8.39 ஜிஎம்டி வரையிலாக பூமியின் காந்தப்புலம் தகர்ந்து போனதாய் தெரிவிக்கிறது.

ojd0Ro3.jpg

2 மணி நேரத்திற்கும் மேலாக :

அதாவது கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்க கூடிய சூரியனிடம் இருந்து, பூமி கிரகம் பாதுகாக்கப்படாது இருந்துள்ளது. 

YdX0QL1.jpg

கதிர் வீச்சு :

இதுபோன்ற தற்காலிகமான காந்தப்புல செயல் இழப்பானது, தொழில்நுட்ப பாதிப்புகள், விமான கண்காணிப்பு போன்றவைகளில் ஆரம்பித்து பூமி கிரக ஜீவராசிகளுக்கு அதிக அளவிலான கதிர் வீச்சு வரையிலாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

06747AH.jpg

பூகம்பங்கள் :

சூப்பர்ஸ்டேஷன்95 என்னும் சதியாலோசனை கோட்பாட்டு வலைத்தளம் ஆனது "காந்தப்புல செயலிழப்பு ஆனது பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், எதிர்பாராத கடல் நீரோட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான அலைகள் ஆகியவைகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. 

yx0XMk1.jpg

தரவு புகைப்படங்கள் :

தொடர்ந்து மற்றொரு சதியாலோசனை கோட்பாட்டு வலைத்தளம் ஸ்னோப்ஸ்.காம், பூமி கிரகம் காந்தப்புலம் மூலம் பாதுக்காக்கப்படும் போது மற்றும் காந்தப்புலம் செயல் இழந்த போதும் என்று இரண்டு தரவு புகைப்படங்களையும் வெளியிட்ட்டது. 

MSIvBGd.jpg

மென்பொருள் சிக்கல் :

இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்ட நாசா, வெளியான வானிலை கணிப்பு மைய தரவுகள் ஒரு மென்பொருள் சிக்கலால் (monitoring software glitch) உருவானதே ஒழிய, பூமியின் காந்தப்புலம் செயல் இழந்த தால் ஏற்படவில்லை என்று எல்லா பீதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

iQw7BMy.jpg

மோசமான உள்ளீடு தரவு :

"வெளியான இரண்டு தரவு புகைப்படங்கள் ஆனது மோசமான உள்ளீடு தரவு (Bad Input Data) மூலம் சிதைந்து போனதால் உருவானது" என்றும் நாசா விளக்கமளித்துள்ளது. 

jXZw2mr.jpg

கவலை :

எது எப்படி இருந்தாலும் காந்தப்புலம் சார்ந்த விடயத்தில் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்றும் விண்வெளி ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

RA7diA2.jpg

15% :

மறுபக்கம் ஆய்வுகள் "காந்தப்புலம் ஆனது கடந்த 200 ஆண்டுகளில் 15% வலுவிழந்துவிட்டது" என்கின்றன.

கருத்துரையிடுக Disqus

 
Top