சாமார்த்தியமாக நாலு பாக்கெட் பிஜிலி பட்டாசு வாங்கி கொடுக்கும் அப்பாக்களுக்கு திரி கிள்ளி தரும் தண்டனை தரப்படுகிறது BusyBee4U Android Apps Download BusyBee4U Android Apps Download புதிய கருத்துக்களை நமது முகபுத்தக பெட்டியில் பயன்படுத்தலாம் ... PDF வடிவத்தில் பதவியை பதிவிறக்க பதிவின் கீழான சின்னத்தை பயன்படுத்தலாம்....... .என் நட்புக்கள் அனைவருக்கும் நன்றி.
இதையும் பாருங்கள் Loading...

Jeevan Amrit water ATMகள்!

Anand Busybee | 10/20/2014 05:17:00 பிற்பகல் | 0 comments
மாதம் மும்மாரி பெய்த தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை என்று தவித்து வருகிறோம். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய பாலைவன பூமியான ராஜஸ்தானில் இப்போது தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இல்லையாம்.  காரணம் வாட்டர் ஏ.டி.எம்., (water ATM) -கள்தான் என்கிறார்கள்.முன்பெல்லாம் இந்தப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அசுத்தமாகவும் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும் இருககும்.  ஆனால் இப்போது அப்பகுதி கிராமங்களில் தண்ணீர் பஞ்சமே இல்லை. 24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு காரணம் வாட்டர் ஏ.டி.எம்.தான் என குடித்து.... மன்னிக்கவும், அடித்து சொல்கிறார்கள். (water ATMs).

ஒரு காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் மாவட்டத்தின் பாகர்பூருக்குச் (Bhakharpur)  சென்று ஒரு டீ கடையில் டீ சொல்லிவிட்டு குடிக்கத் தண்ணீர் கேட்டால், அரை டம்ளர் தண்ணீர்தான் கொடுப்பார். டம்ளர் நிறைய தண்ணீர் கேட்டால், இன்னொரு டீ வேண்டுமானாலும் ஃபிரீயா தருகிறேன் தண்ணீர் மட்டும் கேட்காதீங்க என்பார்கள். அந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியதுண்டு இங்கு.  மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களிலும் இதே நிலைமைதான்.

ஆனால் இப்போதோ  பாகர்பூர் கிரமத்தில் 5 ரூபாய்கு 20 லிட்டர் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங்  துறையும் கேர்ன் நிறுவனமும் (இந்தியன் ஆயில் & கேஸ் கம்பனி) சேர்ந்து, ஆர்.ஓ ( Reverse Osmosis)  வாட்டர் பிளான்ட் மூலமாக சுத்தமான தண்ணீர் சப்ளை செய்கிறது. இந்த திட்டத்துக்கு 'ஜீவன் அம்ருத்'  (Jeevan Amrit ) என்று பெயர். இதன் சிறப்பு ஏ.டி.எம்.மையங்களில் இருந்து தண்ணீர் பெறமுடியும்.

இத்திட்டத்தின்படி பயனடைய வாட்டர் ஏ.டி.எம். கார்டு'களை 150 ரூபாய் செலுத்தி பெற்றுகொள்ளவேண்டும். அதே தொகைக்கு ரீசார்ஜ் செய்தபிறகு இந்த கார்ட்டை பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் 20 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த வார்ட்டர் கார்டுகள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் கிராம நிர்வாகத்தின் மூலம் ஆர்வோ வாட்டர் பிளான்ட் ஊழியர்களுக்கும், ஏ.டி.எம்., ஆப்ரேட்டர்களுக்கும் மாத சம்பளமாகத் தரப்படுகிறது. மீதம் இருந்தால், கிராம நிர்வாகத்துக்குச் சேரும்.
''ஒரு நேரத்தில் எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீருக்காக பல மைல்கள் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவருவார்கள். தண்ணீர் கிடைத்தாலும் அது சுத்தமானதாக இருக்காது. ஒருவேளை தண்ணீர் லாரி வந்தால் தண்ணீர் பிடிக்கும் போட்டியில் சண்டை போட்டுக்கொள்வார்கள். எங்க ஊரில் பாதி சண்டை தண்ணீர்க்காகவே நடந்ததாக இருக்கும்.  இப்போது ஏ.டி.எம். மூலம் சுத்தமான தண்ணீர் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்கிறார் பாகர்பூர் கிராமவாசி ஒருவர்.
 
24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் சப்ளை செய்யும்  இந்த 'ஜீவன் அம்ருத்' திட்டத்தை இன்னும் பல கிராமங்களில் விரிவு படுத்த ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங் டிப்பார்ட்மெண்ட் திட்டம் தீட்டி வருகிறது. ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் மேலும்  பல தண்ணீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.  ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் 'பரிமல் பவுன்டேஷன்' நவீன விஞ்ஞான முறையில் சுத்தமான தண்ணீர் ஏ.டி.எம்-கள் மூலம் சப்ளை செய்துவருகிறது. இந்த திட்டத்திற்கு 'சர்வஜல்' என்று பெயர்.

 
ஹிமாச்சல் பிரதேஷ் தலை நகர் சிம்லாவில் தற்போது வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 50 பைசாவுக்கு 1 லிட்டர் சுத்தமான நீர் கிடைக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விரிவுபடுத்த அரசாங்கம் யோசித்து வருகிறது. டெல்லியில் வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசாங்கமும் வாட்டர் ஏ.டி.எம்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

போகிறபோக்கைப் பார்த்தால் நாடு முழுக்க பணம் எடுக்கும் வங்கி ஏ.டி.எம்களுக்கு இணையாக வாட்டர் ஏ.டி.எம் வந்துவிடும்போல் இருக்கிறது. எது எப்படியோ ஏடிஎம்களிலிருந்து எடுக்கும் தண்ணீரை பணம் போல(!?) மக்கள் செலவு செய்யாமல் இருந்தால் சரி!

9910641064 ‘வாட்ஸ் அப்’ ‘ஸ்டிங் ஆபரேஷன்’ சும்மா அதுருதுல்ல !!!!!!!!!

Anand Busybee | 10/20/2014 04:23:00 பிற்பகல் | 0 comments
மொபைல் சாதனங்களில் உடனுடக்குடன் செய்திகளை அனுப்புவதில் உலகெங்கும் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ் அப்’ தற்போது குற்றங்களுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் ஆயுதமாகவும் மாறியுள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளை உடனடியாக பரிமாற்றம் செய்துக்கொள்ள உதவும் ‘வாட்ஸ் அப்’ மூலம் போலீஸ் மீதான புகார்களை தெரிவிக்க புதிய உதவி எண்ணை டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.


ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 9910641064 என்ற உதவி எண் அமலுக்கு வந்ததுள்ளது என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. உங்களுடைய புகார்களை மட்டும் இன்றி உங்களிடம் லஞ்சம் பெற்றவர்கள் வாய்ஸ் மெசேஜ் மற்றும் வீடியோவையும் இதில் அனுப்ப முடியும்.


‘ஸ்டிங் ஆபரேஷன்’ எனப்படும் ரகசிய பதிவுகள் மூலமும் படம் பிடித்து ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்று டெல்லி போலீஸ் துணை ஆணையர் (லஞ்ச ஒழிப்பு பிரிவு) சிந்து பிள்ளை தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் யாராவது லஞ்சம் கேட்டாலோ, பொதுமக்களிடம் தவறாக நடந்து கொண்டாலோ அதனை ‘வாட்ஸ் அப்’ மூலம் படம் பிடித்து டெல்லி போலீசுக்கு அனுப்பி வைக்கலாம். எங்களுக்கு புகார்கள் வந்தால், முதலில் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் உண்மைத்தன்மை தடயவியல் அறிவியல் துறை உதவியுடன் சரிபார்க்கப்படும்.

உண்மை என்று தெரியவந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனே தற்காலிக பணி நீக்கமும், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று சிந்து பிள்ளை தெரிவித்துள்ளார். டெல்லியில் ஏற்கனவே 1064 மற்றும் 1800111064 என இரண்டு உதவி தொலைபேசி எண்கள் உள்ளன. தற்போது, கூடுதலாக ‘வாட்ஸ் அப்’ மூலம் போலீஸ் மீதான புகார்களை தெரிவிக்க புதிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் அறிய உதவும் இணையதளம்

Anand Busybee | 10/17/2014 05:11:00 பிற்பகல் | 0 comments
எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், ஊழியர்களுக்கான வருகை பதிவேட்டையும் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனுக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் பயனாக அரசு ஊழியர்களின் தினசரி வருகை விவரங்களை, பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


அரசு ஊழியர் செயல்பாட்டில் திறந்தவெளித்தன்மையை கொண்டு வரும் வகையிலான இந்த திட்டம்,  ஊழியர் வருகையை கண்காணிப்பதற்கும் வழி செய்யும் முன்னோடி திட்டமாக இருக்கிறது.ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.  இந்த ஆன்லைன் வருகை பதிவேட்டை http://attendance.gov.in/ எனும் இணையதளத்தில் பார்வையிடலாம்.

அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பற்றிய அறிய முற்படும் போது பெரும்பாலும் அலட்சியத்திற்கே ஆளான திருவாளர் பொதுஜனம் இந்த தளத்தை பார்த்தால் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிடுவார். ஏனெனில் இதில் மத்திய அரசு அலுவலகங்களில் எந்த எந்த துறைகளில் எத்தனை ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். மொத்த ஊழியர்களில் பணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வதுடன், அவர்களில் குறித்த நேரத்தில் வந்தவர்கள் ( 9.00-10.00 மணி) எண்ணிக்கை, தாமதமாக வந்தவர்கள் மற்றும் 11 மணிக்கு பின் வந்தவர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இவை அழகிய வரைபடமாக காட்டப்படுகிறது.


துறை வாரியாக விவரங்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாளில் ஒரு அரசு அலுவலகத்தில் எத்தனை பேர் வேலைக்கு வந்துள்ளனர் என்ற தகவலையும் சுலபமாக தெரிந்துகொள்ளலாம். இந்த விவரங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதால், குறிப்பிட்ட கால அளவிலான ஊழியர் வருகை குறித்த போக்கையும் இந்த தளம் சுட்டிக்காட்டும்.


ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் இந்த வருகை பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் வருகைக்கான டிஜிட்டல் பலகை அல்லது கையடக்க ஸ்கேனர் மூலம் வருகையை பதிவு செய்யலாம். அந்த விவரம் உடனே பதிவேட்டில் ஏற்றப்பட்டுவிடும். பயோமெட்ரிக் முறை என்பதால் ஊழியர் மட்டும்தான் பதிவு செய்ய முடியும். வராமல் கையெழுத்து போடுவதோ, தாமதமாக வந்து கையெழுத்து போடுவதோ சாத்தியமில்லை.
முதல் கட்டமாக தலைநகர் டெல்லியில் உள்ள 148 அரசு துறைகளின் வருகை விவரம் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளது. படிப்படியாக மற்ற மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, நாடு தழுவிய அளவில் இது அறிமுகமாக உள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வருகை பதிவேட்டின் இன்னொரு முக்கிய அம்சம், இந்த விவரங்களை அப்படியே டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்பதுதான். அதேபோல அரசு ஊழியர்களின் பெயரை குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது. ஊழியரின் பதவி, இமெயில் உள்ளிட்ட விவரங்களையும் பெற முடியும். அந்த அளவுக்கு இந்த திட்டம் விரிவாகவும் நுட்பமாகவும் இருக்கிறது.

அரசு ஊழியர்கள் செயல்பாட்டில் இந்த திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. தகவல் அறியும் உரிமை சட்டம் போலவே இந்த தகவல்களை பொதுமக்களும் செயற்பாட்டாளர்களும் மக்கள் நலனுக்காக ஆயுதமாக பயன்படுத்தலாம். மொத்த இந்தியாவுக்கும் விரிவு படுத்தப்பட்டால் இந்த திட்டம் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள்.


அருமையான திட்டமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எனில் அரசு அதிகாரியான ராம் சேவக் சர்மாவுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஆதார் திட்டத்தில் நந்தன் நிலேகனியின் வலதுகரமாக செயல்பட்ட சர்மா , ஜார்கண்ட் மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட போது ,தலைமை செயலகத்தில் சில ஊழியர்கள் பதிவேட்டில் வருகை தந்திருந்தாலும் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பது கண்டு அதிருப்தி அடைந்தவர், ஆதார் அட்டை அடிப்படையில் ஊழியர்கள் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தார்.: attendance.jharkhand.gov.in. இப்போது இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு 24 மாவட்டங்களில் 69 துறைகளில் 34,000 ஊழியர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் செயலராக நியமிக்கப்பட்டவர் ஜூன் மாத வாக்கில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த திட்டத்தை எடுத்துரைத்தார். மோடி இதற்கு பச்சைக்கொடி காட்டவே, டிஜிட்டல் இந்தியாவின் அங்கமாகி அமலுக்கு வந்துள்ளது. 

 
இந்த திட்டத்தை மாநில அளவிலும் விரிவுபடுத்துவது சாத்தியம் என்கின்றனர். இது நேர்மையான நிர்வாகத்திற்கான முக்கிய ஆயுதமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. உதாரணத்திற்கு பள்ளிகளில் மதிய உணவு பயனாளிகளுக்கும் இதை விரிவுபடுத்தலாம். அப்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவின் அளவை ஒப்பிட்டு பார்த்து திருட்டை தடுப்பதம் சாத்தியமாகலாம். அரசு மருத்துவமனை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இதை பயன்படுத்தலாம்.


இதன் சாத்தியங்கள் எல்லையில்லாதது. நடைமுறையில் இதன் பயன்பாட்டை பொருத்திருந்து பார்க்கலாம். அரசு ஊழியர் வருகையை அறிய: http://attendance.gov.in/

காசை முழுங்கினால் சுலபமாக எடுக்கலாம்

Anand Busybee | 10/17/2014 01:13:00 பிற்பகல் | 0 comments
ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.

"இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை''
ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''


"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''


கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை.


அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார். பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.


எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.


"சார் நீங்க டாக்டருங்களா?''


"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?

வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!

Anand Busybee | 10/17/2014 10:51:00 முற்பகல் | 0 comments
n9QiAXG.jpg

எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.


யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா ?


"கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.


நீரில் கரையும் தன்மையுள்ள பி மற்றும் சி வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு வைட்டமின் களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம்.


ஏ, டி, கே போன்ற வைட்டமின்களை கொழுப்புள்ள உணவுப் பொருட்களுடன் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த வைட்டமின்கள் கொழுப்பு சேகரிக்கப்படும் இடங்களில் சேகரம வாதால், இந்த வகை வைட்டமின்கள் அதிகரித் தாலும் சிக்கல்தான்" 
வைட்டமின் அதிகரிப்பதால் வரும் பிரச்னைகள்


வைட்டமின் ஏ


வைட்டமின் ஏ அன்றாடம் சராசரியாக 4,500 மைக்ரோ கிராம் தேவை. இதற்கும் அதிகமாக இந்த வைட்டமின் நம் உடலில் சேரும்போது 'ஹைப்பர் வைட்டமினோசிஸ்’ என்னும் டாக்சிக் நிலை ஏற்படும். இதனால் பசியின்மை, வாந்தி, தலைவலி, முடி உதிர்தல், தூக்கமின்மை என சின்னச்சின்னப் பிரச்னைகளில் தொடங்கி அதிகப்படியான வைட்டமின்கள், உடலில் இருந்து வெளியேற்றப்பட முடியாமல் கல்லீரலிலே தங்குவதால், கல்லீரல் செயல்பாட்டையே பாதிப்பது வரை சென்றுவிடும். மேலும், எலும்புகளைக் கடினமடையச் செய்து சாதாரண கை, கால் அசைவின்போதுகூட வலியை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் கண்டிப்பாக இந்த மாத்திரைகளை எடுக்கக் கூடாது. ஏனெனில் இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளின் உடலுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.


வைட்டமின் டி


எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்தினை உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் டி மிக முக்கியம். ஆனால் இது அதிகமாகும்போது, சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும். இதனால் அடிவயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும். மாதவிடாய் நின்ற பெண்கள்கூட மிகவும் அவசியமெனில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் வாரத்துக்கு 60,000 யூனிட்ஸ் என்ற அளவில் எட்டு வாரங்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளைத்  தொடர்ந்து எடுக்கலாம். இதன் அளவு அதிகமானால், 'ஹைப்பர் பாராதைராய்டிசம்’ என்ற ஹார்மோன் பாதிப்பு ஏற்படும் என்பது நினைவில் இருக்கட்டும்.


வைட்டமின் இ


இப்போது கடைகளில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் பலவற்றிலும் வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. இன்றைய இளம் பெண்கள், முகப்பரு பிரச்னை வந்தால் தாங்களாகவே வைட்டமின் இ மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது நல்லதல்ல. வைட்டமின் இ அளவு அதிகமாகும்போது, ரத்த இழப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுக்கக் கூடாது. மேலும், வைட்டமின் இ மாத்திரைகள், ஆண்தன்மைக்கான இனப்பெருக்க செயல்பாட்டை அதிகரித்தாலும், தொடர்ச்சியாக எடுக்கும்போது, அரிதாக புராஸ்டேட் கேன்சரை உண்டாக்கிவிடலாம்.


வைட்டமின் கே


ரத்தம் உறைதலுக்கு இந்த வைட்டமின் ரொம்பவும் தேவை. ஆனால், இது உடலில் அதிகமாகும்போது 'ஹைப்பர் த்ராம்போனீமியா’ என்ற பாதிப்பு ஏற்படுவதால் அளவுக்கதிகமாக ரத்தம் உறைந்து ரத்தக் கட்டிகளை உண்டாக்கிவிடும். இந்த ரத்தக் கட்டிகள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளுக்கக்ச் செல்லும்போது மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற் படுத்திவிடும். இதனால் திடீர் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம். மேலும் இதய நோய்களுக்காக ஆன்டி கோயாகுலன்ட்ஸ் (ANTI COAGULANTS) மாத்திரைகளான வார்ஃபாரின் மற்றும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரைக் கேட்காமல் வைட்டமின் கே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.சென்னை 'க்வா நியூட்ரிஷன்' அமைப்பைச் சேர்ந்த உணவியல்நிபுணர் கிருத்திகா ராஜன் தரும் வைட்டமின் டிப்ஸ்:8WWnsX7.jpg

வைட்டமின் ஏ குறையும்போது, பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேரட், பப்பாளி, மஞ்சள் நிற குடமிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கீரை இவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாட்டைத் தவிர்க்கலாம்.


பி வைட்டமின்களில் பலவகைகள் உள்ளன. இதில், பி12 மற்றும் பி9 (ஃபோலிக் ஆசிட்) இரண்டும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு மிக முக்கியமானவை. இவற்றின் குறைபாட்டினால் ரத்த சோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தடுக்க, முட்டை, இறைச்சி, சம்பா கோதுமை, முட்டைக்கோஸ், கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா கதிர்களினால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் டி, எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் கிடைப்பதற்குத் தேவை. சூரிய ஒளி அதிக அளவில் கிடைக்காத சிறியவர்களுக்கு ரிக்கட்ஸ், வயதான பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, மீன் எண்ணெய், முட்டை, இறைச்சி, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலுடன் கலந்து வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி அவசியம். இந்தச் சத்து குறைந்தால், ஸ்கர்வி என்னும் பல் பாதிப்பு ஏற்படும். சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி மற்றும் பப்பாளி, கீரை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம். வைட்டமின் சி உள்ள உணவுப் பொருள்களுடன், இரும்பு நிறைந்த பேரீச்சை, திராட்சை போன்றவற்றையும் சேர்த்து உண்ணலாம்.

வைட்டமின் இ மிகச் சிறந்த 'ஆன்டி ஆக்சிடன்டாக’ செயல்பட்டு புற்றுநோயைத் தடுக்கிறது. இது குறையும்போது வயதான தோற்றம், குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க பாதாம், முளைகட்டிய கோதுமை, பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உணவு செரித்தலின்போது குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் கே சத்தின் அளவு குறைந்தால், ரத்தம் உறைதல் பாதிப்புகள் ஏற்படும். கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சோயா எண்ணெய் இவற்றை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம், இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்

பாஸ்ட் புட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள்

Anand Busybee | 10/14/2014 12:15:00 பிற்பகல் | 0 comments


1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை ...

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடல
ும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் ...


- - தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்,

Anand Busybee | 10/14/2014 11:44:00 முற்பகல் | 0 comments
சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்கமறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது.

கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ''ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம்.அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான் குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக் கொண்டுபோக முடியாது'' என்று வாதிட்டார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா? அவரும் அசராமல் திருப்பி அடித்தார். ''ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்) அல்ல. அதனால் தட்டு, டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம். இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள் விற்பனைக்குவரும்போது பேக்கிங்கிற்கும் சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும் சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில் சொந்தம்.

மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப் வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன''என்று வாதிட்டார்.

ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில்,
'குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’ என்று தீர்ப்பானது.

Alex Gorsky CEO Johnson and Johnson

Anand Busybee | 10/13/2014 05:42:00 பிற்பகல் | 0 comments
The most important driver of our success regarding our results, reputation, and performance has to do with the strong dedication and commitment of the employees…
A champ of multiplicity in the workplace, Alex Gorsky is an American businessman. He assumed the position as the Chief Executive Officer of Johnson and Johnson since April 26th, 2012. Johnson and Johnson deals with baby care products. J&J is synonymous with soaps, baby powder, diaper rash creams, baby oils, diapers, wet wipes and other fast moving consumer goods (FMCG) related to baby care. J & J has been in the market for more than 100 years from now, and the company is headquartered in the United States of America.

Mr. Gorsky is a past marathon runner and tri-athlete. His zeal includes his family, American and English literature and fitness.

He holds diversified experience in the domains of sales, marketing and management roles at Janssen Pharmaceutical, a Johnson & Johnson unit, and was based in New Jersey. Mr. Gorsky began his pharmaceutical vocation as a sales representative and held various roles of increasing responsibility in sales, marketing and general management.

Early Days and Education
Alex Gorsky was born on the 20th of March 1960 and is currently 53 years old. He was born and brought up in the New York City, NY. Alex Gorsky completed his Bachelor’s Degree of Science at US Military Academy, West Point, New York. Mr. Gorsky is also known to one and all as the former marathon runner and is a tri-athlete. Some of his passions include family, his fitness and the American and English literature.
He spent around 6 years serving for the US army. During his career as an Army officer he has served in Europe, the United States and Panama. In 1996, he obtained his Master’s Degree in Business Administration from the Wharton School of University of Pennsylvania. He finished his career at the Army with the rank of captain and earned the Ranger tab and Airborne wings.

The Spark
In 1988, he spent about 8 years performing various senior level roles and management positions at Janssen Pharmaceutica, and in Johnson and Johnson unit based out of New Jersey. He joined Novartis Pharmaceuticals Corporation in 2004 as Chief Operating Officer and Head of General Medicines.
He was appointed as Head of Pharma, North America and CEO during the year 2005 at Novartis group. During his tenure, he has developed several medical strategies and has won several awards and accolades at Novartis and its franchises.

He later on rejoined Johnson and Johnson, which he had previously left in New Jersey and joined other leading Pharma companies as stated above. When he rejoined J & J, a pharma biggie, he was appointed as the worldwide chairman of the surgical care group of J & J. He was the chairman of the company’s pharmaceutical unit in Europe, Middle East and Africa. He was the worldwide chairman of the medical devices and diagnostics group at Johnson & Johnson, serving in that role until September 2009. He now serves as CEO. This describes his career stint of starting off in the Army and landing up as CEO of Johnson and Johnson.

His Journey with Johnson and Johnson
He started off in Johnson and Johnson Company as a sales representative way back in 1988. He had completed his career stint at the US army by then. He retired from the US military forces as the Captain. J & J was called Janssen Pharmaceutica then. He was in the same firm for almost 15 years. Over the span of his 1.5 decade career with J & J, he assumed increasing responsibilities in sales, marketing and management. As he had obtained a Master’s Degree in Business Administration from Wharton University of Pennsylvania, it was an add-on plus for his in his career spark.

Mr. Gorsky assumed the post of President of Janssen Pharmaceutica, and he was appointed the Company Group Chairman of Johnson and Johnson Pharmaceuticals business in Europe, Middle East and Africa. He subsequently left the firm to join Novartis group. Mr. Gorsky returned back to J & J in the year 2008. He was the Company Group Chairman for Ethicon. Then there has been no looking back for this ever dynamic and hardworking individual.

In September 2009, he was appointed as the worldwide chairman of Medical devices and Surgical Equipment group of J & J. Mr. Gorsky became Vice Chairman of the Executive Committee in January 2011 and finally bagged the CEO’s post in the year 2012.

As he has a very long stint at the pharma industry, and as a high patronage advocate of diversity and inclusion, Mr Gorsky was named Mentor of the year 2009 by Healthcare Businesswomen's Association, an organization he has been involved with for many years.

Mr. Gorsky has taken in responsibilities in different verticals of the industry such as administration, community affairs, Finance, Human Resources, Information Management, Marketing, Medical Affairs, Public relations and Process Excellence. You simply name the department, and he must have handled the unit at some point or the other in his entire career span. There are a couple of individuals rather CEO’s who just stick to their line of business. They don’t want to assume responsibilities in cross verticals. However, this individual has worked in all spectrum of business and has left no leaf unturned.

For the welfare of the society
He is actively involved in the National Alliance for the Mentally Ill, the National Alliance on Aging, the Philadelphia College of Pharmacy, the Doylestown Hospital Board, the Boy Scouts of America, and as a Youth League Coach for Lacrosse. Mr. Gorsky also serves on the boards of the Travis Mansion Foundation and the Congressional Medal of Honor Foundation. This shows his level of concern and love towards the mentally challenged and underprivileged sections of the society. He just wasn’t the easy come and easy go kind of person. He puts in sustained efforts and dedication to any project that he takes up.

For His company based performance in a nutshell
Mr. Gorsky took up the coveted CEO’s role in April 2012, but he was the guy behind achieving one of the biggest milestones, the company could ever think of. He facilitated the buy-out of Swiss device-maker Synthes, a $19.7 billion deal. The transaction was closed after a couple of months on Mr. Gorsky taking up the role of the CEO.

On the pharma side of the business, he helped J & J in releasing several new drugs at a time when other biggie Pharma companies in US were bogged down by recession. Prostate cancer pill named Zytiga and blood thinner Xarelto were big additions to the revenue making stream as such. Moreover, the company was one of the only four top drug-makers actually to grow sales last year, to $67.2 billion.
This was what Mr. Gorsky as a CEO accomplished, to making the company stand at a position where it is, today!

Awards & Accolades
Mr. Gorsky was named as the 2009 Mentor of the Year by the well known Healthcare Businesswomen's Association.
He is also the executive sponsor for the two Johnson & Johnson affinity groups, the Women's Leadership Initiative and the Veteran's Leadership Council.
U.S. Veterans Magazine, as well as the Hispanic Network Magazine recognized Johnson & Johnson in their special “Best of the Best” issue.
The Working Mother magazine too has named Johnson & Johnson to be the Best Companies for Working Mothers in 2013.
The above mentioned and many more accolades were achieved by this firm under the leadership of Alex Gorsky.
Professional Affiliations
International Business Machines Corporation
Mentor Worldwide LLC
Novartis AG
Novartis Corporation
United States Military Academy.
Novartis Pharmaceuticals Corporation
University of Pennsylvania - The Wharton School
Quotes
  With regard to my own personal management style, I am a big believer in communication, collaboration, and teamwork, and although I have to focus on the big picture, I think it’s important to know and understand the details as well.
  I believe that everyone who works at Johnson & Johnson – our more than 128,000 employees globally, as well as our partners – does so because of our credo: a set of beliefs written over 70 years ago by the son of one of our founders.
  I believe that the most important driver of our success regarding our results, reputation, and performance has to do with the strong dedication and commitment of the employees of Johnson & Johnson.
  It’s a tremendous opportunity, and it ensures that Johnson & Johnson will remain vital into the future as we look for new ways to help people live longer, happier lives across the world.
  The global challenge of helping more people everywhere live longer, healthier, and happier lives means we will have to accelerate innovation in the future.
  We believe that we must not just be innovators of products and services; we must innovate in everything we do and how we do it. The old models will no longer suffice.
  In the areas of health, wellness, and health literacy, our operating companies are introducing a variety of apps and products – such as the 7 Minute Workout app – that encourage and empower people to take better care of their health.
  In order to manage in a complex global health-care environment, we believe in matching decision-making with market needs. This decentralized approach has served us well for almost a century, and it remains one of our key growth drivers.
  Our mission is to improve the health and well-being of individuals, families, communities, and countries.
  We also believe that human health benefits from a healthy planet. We have been setting environmental goals for nearly 30 years, and we are committed to continuously improving on those goals to reduce our environmental footprint.

கட்டணம் இல்லாமல் இலவசமாக Bank account balance தெரிந்து கொள்ள

Anand Busybee | 10/10/2014 03:20:00 பிற்பகல் | 1 comments
Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை.

கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

ICICI BANK: 022 30256767

Panjab National Bank: 0124 2340000 or 1800 180 2222

AXIS BANK: 092258 92258

BANK OF INDIA: 022 33598550

INDIAN BANK: 092895 92895

HDFC BANK: 1800 270 3333

CANARA BANK: 092892 92892


குறிப்பு:

account open செய்தபோது தந்த number யிலிருந்து dial செய்தால் 2 ring அடித்து cut ஆகி balance, sms மூலம் வரும்,


கட்டணம் இல்லை.

வாடி நின்ற வாழை விவசாயிகள்... வாழ வைத்தத் தொழில்நுட்பங்கள்...

Anand Busybee | 10/07/2014 05:42:00 பிற்பகல் | 0 comments
வாழை சாகுபடிக்கேற்ற தட்பவெப்ப நிலை, தண்ணீர் வளம்... போன்ற சாதகமான அம்சங்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்று தேனி மாவட்டம். ஆனால், கால ஓட்டத்தில், அதிகரித்துக் கொண்டே போகும் சாகுபடி செலவு... குறைந்து கொண்டே போகும் கொள்முதல் விலை... உள்ளிட்ட பல காரணங்களால், 'வாழை சாகுபடியே வேண்டாம்’ என ஒதுக்கித் தள்ளியிருந்தனர், இங்குள்ள விவசாயிகள் பலரும். தற்போது, ஆச்சரியப்படத்தக்க வகையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, வாழை உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறார்கள், இந்த விவசாயிகள்!

'எப்படி சாத்தியம்?’ என்று ஆச்சர்யப்படுபவர்களுக்கு 

'தொழில்நுட்பங்கள்தான்’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்கிறார்கள்!

ஆம்... முறையான சாகுபடி முறைகள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியதால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

''ஒரு ஏக்கர் வாழை சாகுபடியில் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் எடுத்துக் கொண்டிருந்த நாங்கள், இன்று இரண்டரை லட்சம் ரூபாயைத் தாண்டி சம்பாதிக்கிறோம்' என்று சொல்லும் இவர்கள், தங்களது முன்னேற்றத்துக்குக் காரணமாக... அப்பகுதியில் அமைந்துள்ள வாழை பதப்படுத்தும் நிலையம் ஒன்றையும் கை நீட்டுகிறார்கள்!

சின்னமனூருக்கு வெளியே, உத்தமப்பாளையம் சாலையில் இருக்கிறது, 'ஃபிரெஷ் பனானா’ என்கிற பெயர் கொண்ட அந்த நிலையம். ஒரு பகுதியில் வாழைகளை, ஒரு பெண்கள் குழு தரம் பிரித்துத் தர அவற்றை 'பிளாஸ்டிக் டிரே’க்களில் அடுக்கி குளிர்பதனக் கிட்டங்கியில் அழகாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பகுதியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய 'கன்டெய்னர்’களில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதற்காக வாழைக்காய்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
நிலையத்தின் உரிமையாளர் ஏ.பி. கருப்பையாவை சந்தித்தோம். பணியாளர்களுக்கு, சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

''தேனி மாவட்டத்துல வாழையும் ஒரு முக்கிய பயிர். ஆனா, வாழை சாகுபடி ரொம்ப நஷ்டமாயிட்டதால தாக்குப் பிடிக்க முடியாம, நிறைய பேர் நிலத்தைகூட வித்துட்டுப் போயிட்டாங்க. கிட்டத்தட்ட 2004-ம் வருஷம் வரைக்கும் அப்படித்தான் நிலைமை இருந்துச்சு. அந்த சமயத்துலதான் 'திசு வாழை’ அறிமுகமாச்சு. அதுல அதிக எடையோட பெரியத் தார் கிடைச்சாலும், பெருசா லாபம் கிடைக்கல.

ஒரு கட்டத்துல, 'எப்படியாவது வாழையில ஜெயிக்கணும்’னு அது பத்தின விஷயங்களைத் தெரிஞ்சுக்குறதுக்காக, நாங்க கொஞ்ச பேர் சேந்து... முக்கியமான வாழைச் சந்தைகள், அதிக மகசூல் எடுத்த வாழை விவசாயிகள், திசு வாழை கம்பெனிகள்னு இந்தியா முழுக்க, சுத்தி அலைஞ்சதுல... ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு விஷயத்தைக் கத்துகிட்டோம். அப்படியே நாங்க, 'எந்தெந்த விஷயத்துல தப்பு செஞ்சோம்’னும் புரிஞ்சுக்கிட்டோம்.

அழிவைக் குறைத்த அறுவடை முறை!
ஊருக்குத் திரும்பினதும், நாங்க கத்துக்கிட்ட விஷயங்களைச் செயல்படுத்த ஆரம்பிச்சோம். என்னோட 50 ஏக்கர் வாழைத் தோட்டத்துல ஏற்றுமதித் தரம் வாய்ந்த வாழை உற்பத்திக்கான முறைகளை ஒவ்வொண்ணா செய்ய ஆரம்பிச்சேன். எங்க பகுதியில பலரும் இதேபோல செய்தாங்க. தார் விட்டதும், அதுல ஒரு பிளாஸ்டிக் கவரை மாட்டி விட்டதும், காயில கருப்புப் புள்ளிகள் விழறது குறைஞ்சுது. வழக்கமா, வாழைத் தாரை வெட்டி, அப்படியே கீழ வெச்சுருந்து லாரி வந்ததும் தூக்கி அடுக்குவோம். இதுல அடியில இருக்கற காய்கள், அடிபட்டு நசுங்கி வீணாத்தான் போகும். அதைத் தவிர்க்கறதுக்காக தாரை மரத்துல விட்டுட்டு சீப்பை மட்டும் 'ரோப்’ மூலமா அறுவடை செஞ்சு, பிளாஸ்டிக் டிரேல அடுக்கி, லாரியில ஏத்த ஆரம்பிச்சோம். இதனால சேதாரம் சுத்தமா குறைஞ்சுது. சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்த ஆரம்பிச்சதும்... ஆள் தேவை குறைஞ்சு, மகசூலும் அதிகமாச்சு.

சாகுபடியை சரி பண்ணியாச்சு. அடுத்து நல்ல விலை கிடைக்கணும்ல... அதுல நிறைய பிரச்னைகள். அதிக விளைச்சல் இருக்குறப்போ, விலை இறங்கிடும். அதுக்கு பதப்படுத்தும் நிலையம் மட்டும்தான் தீர்வுனு தெரிஞ்சுக்கிட்டோம். முதலீடு அதிகமா தேவைப்பட்டாலும், நானே துணிஞ்சு அதை ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்பறம்தான் வாழைக்கு அதிக விலை கிடைக்க ஆரம்பிச்சது. விவசாயிங்ககிட்ட இருந்து காய்களை கொள்முதல் பண்ணி, தரம் பிரிச்சு, இயற்கை முறையில பழுக்க வெச்சு சந்தைக்கும் அனுப்பிக்கிட்டிருக்கோம். 'ஃபிரெஷ் பனானா’ங்கிற பேர்ல வெளிமாநிலங்கள், வெளிநாடுகள்னு அனுப்பிக்கிட்டிருக்கோம்'' என்று சொன்ன கருப்பையா...  

கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை!
''நிறைய பேர், இயற்கை விவசாயம் செஞ்சா... சரியான மகசூல் கிடைக்கறதில்லம்பாங்க. அளவுக்கு அதிகமா ரசாயனங்களைக் கொட்டுனதால, கெட்டுப்போன மண்ணுல... இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சதுமே மகசூல் கிடைச்சுடாது. இயற்கை விவசாயத்துக்கு மாற நினைக்கறவங்க, ரசாயனத்தைக் கொஞ்சம், கொஞ்சமா குறைச்சுக்கிட்டு, இயற்கை இடுபொருளை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுக்கிட்டே வரணும். பசுந்தாள் உரங்கள், ஆட்டுக்கிடைனு தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருந்தா... ஒரு கட்டத்துல மண் வளமாயிடும். அதுக்குப் பிறகு முழுமையான இயற்கை விவசாயம் செய்யலாம்'' என்ற கருப்பையா நிறைவாக,

அஞ்சு லட்சம் லட்சியம்!
ரெண்டரை லட்சம் நிச்சயம்!
''இப்ப தேனி மாவட்டத்துல பெரும்பாலான வாழை விவசாயிங்க 65 சதவிகிதம் இயற்கை, 35 சதவிகிதம் ரசாயனம்னுதான் செஞ்சுட்டு இருக்காங்க. அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவுலதான் ரசாயனத்தைப் பயன்படுத்துறாங்க. முழுக்க இயற்கையில செய்றவங்களோட எண்ணிக்கையும் கூடிகிட்டிருக்கு. 2004-ம் வருஷம் 5 ஆயிரம் ஏக்கர்லதான் வாழை இருந்துச்சு. இப்ப, 30 ஆயிரம் ஏக்கர்ல வாழை சாகுபடி நடக்குது. அப்ப, கிலோ 3 ரூபாய்லருந்து 4 ரூபாய் வரைக்கும்தான் காய் விக்கும். இப்போ, கிலோ 12 ரூபாய்க்கு விக்குது. ஏக்கருக்கு சர்வசாதாரணமா ரெண்டரை லட்ச ரூபா அளவுக்கு வருமானம் கிடைச்சுடுது. ஒரு ஏக்கர்ல அஞ்சு லட்ச ரூபாய் சம்பாதிக்கணும்ங்கிறதுதான் எங்க இலக்கு. அதுக்காகத்தான் போராடிட்டுருக்கோம்.

இந்திய அளவுல அதிக வாழை உற்பத்தி செய்ற மகாராஷ்டிராவுல ஒரு ஏக்கர்ல இருந்து அதிகபட்சம் 60 டன் மகசூல் எடுக்கறாங்க. ஆனா, தேனி மாவட்டத்துல அதிகபட்சம் 80 டன் வரை எடுக்கிறோம். இயற்கையின் அருட்கொடையா இந்தப் பகுதியில நிலவுற சூழல்தான் இதுக்குக் காரணம். நாங்க, ரொபஸ்டா வாழையை மட்டும் வெச்சுக்கிட்டு இதை சாதிக்கிறோம். ஆனா, பலவிதமான வாழைகளை விளைய வெக்குற நாகர்கோவில் விவசாயிங்க, மலைவாழை விவசாயிங்களெல்லாம் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினா, கண்டிப்பா கூடுதலா வருமானம் பார்க்க முடியும்'' என்று சொல்லி விடைகொடுத்தார்.

''வாழை விவசாயிகள் வாழ்க்கையில் வசந்தம் வீசுவது உண்மைதானா..? ஏக்கருக்கு இரண்டரை லட்சம் வருமானம் கிடைக்கிறதா..?’ என்று நம் மனதில் எழுந்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் அளித்தார், குச்சனூர் பகுதியைச் சேர்ந்த கோட்டைசாமி. இவர், ஜீரோ பட்ஜெட் முறையில் 15 ஏக்கரில் திசு வாழையை சாகுபடி செய்து வருகிறார்.
''ஒரு காலத்துல பொழப்பே பொசுங்கிப் போய் கிடந்தோம். இன்னிக்கு தளைச்சு நிக்குற துளிராட்டம் இருக்கோம். அதுலயும் இயற்கை விவசாயத்தோட... கூடுதலான தொழில்நுட்பங்களும் சேர்ந்துட்டா... வருமானத்துக்கு என்ன குறை? நான், 15 ஏக்கர்ல வருஷத்துக்கு 30 லட்ச ரூபா லாபம் எடுத்துட்டுருக்கேன்'' என சிலாகித்தவர், தனது ஜீரோ பட்ஜெட் வாழை சாகுபடியையும், தொழில்நுட்பங்களால் எற்பட்ட மாற்றங்களையும் பற்றி சொல்ல ஆரம்பித்தார்...

        அவை அடுத்த இதழில்...
 தொடர்புக்கு, மணிகண்டன், செல்போன்: 80125-79964.

 இப்படித்தான் பழுக்க வைக்கிறோம்!
பதப்படுத்தும் நிலையம் செயல்படும் விதத்தைப் பற்றி விளக்கிய அதன் மேலாளர் மணிகண்டன், ''இந்த நிலையம் 640 டன் கொள்ளளவு கொண்டது. இங்கு, காய்கள் சேமிப்பு, இயற்கை முறையில் பழுக்க வைத்தல் என இரண்டு செயல்பாடுகள் நடக்கின்றன. தோட்டங்களில் இருந்து வரும் காய்களை, முதலில் தரம் பிரிக்கிறோம். பிஞ்சு காய்கள், அடிபட்ட காய்களை நீக்கி, மற்றவற்றைச் சுத்தமாகத் துடைத்து, டிரேக்களில் அடுக்கி குளிர்பதன அறையில் வைத்து விடுவோம். ஆர்டருக்கு ஏற்றபடி இந்தக் காய்களை 'எத்திலீன்’ வாயு மூலமாகப் பழுக்க வைத்து... விற்பனைக்கு அனுப்புவோம். காய்களை முழுவதும் பழுக்க வைக்காமல், 70 சதவிகிதம் பழுத்த நிலையில், குளிர்சாதன வசதியுள்ள லாரிகளில் அனுப்புவோம். அவை, போகும்போதே பழுத்து விடும்'' என்றார்.

 காத்திருக்கும் விவசாய ரயில்!
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பிரபல நிறுவனங்கள் இணைந்து சில விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கின்றன. அதில், கருப்பையாவின் 'ஃபிரெஷ் பனானா’ நிறுவனமும் ஒன்று. அதைப் பற்றி பேசிய கருப்பையா, ''300 கோடி ரூபாய் முதலீட்டில் வட மாநிலங்களையும் தென் மாநிலங்களையும் இணைக்கும் 'ரயில் வணிகப்பாலம்’ என்ற திட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்த உள்ளோம்.
வடஇந்தியாவில் ஆப்பிள், ஆரஞ்சு, விதையில்லா திராட்சைகள்... போன்றவை அதிகமாக விளைகின்றன. ஆனால், அவற்றை நாம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதேபோல, தென்னிந்தியாவில் உற்பத்தியாகும் வாழை, தென்னை, மாம்பழம், சப்போட்டா, ஏலக்காய், மிளகு, காபி, முட்டை... போன்றவற்றை வட மாநிலங்களில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதை சரி செய்து, நமது நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் உரிய பலன் கிடைக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இங்கு விளையும் பொருட்களை ரயில் மூலமாக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பிவிட்டு... அதே ரயிலில் அங்கு விளையும் பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டு வருவோம்.

விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனுள்ள இந்தத் திட்டம், மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. விரைவில் கிடைத்து விடும் என நம்புகிறோம். அது வந்துவிட்டால்... தமிழகத் தோட்டக்கலை விவசாயிகள் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்'' என்றார்.
 பழுக்க வைப்பதால் பாதிப்பு இல்லை!

என்னதான் இயற்கை முறை என்று கூறப்பட்டாலும், 'எத்திலீன் வாயுவைச் செலுத்தி பழுக்க வைக்கும் பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு உடல்ரீதியாக ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமோ?' என்கிற அச்ச உணர்வு இங்கே இருக்கத்தான் செய்கிறது.

இதைப்பற்றி மதுரை, அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகத் துறை மருத்துவர் சௌந்திரபாண்டியனிடம் கேட்டபோது, ''புறத்தூண்டுதல் எதுவும் இல்லாமல் பழங்கள் தானாகப் பழுப்பதை இயற்கை முறையில் பழுத்தது என்கிறோம். ஆனால், இயற்கையிலேயே மரங்களில் காய்கள் பழுப்பதும், இலைகள் பழுத்து மஞ்சள் நிறமடைவதற்கும் காரணமாக இருப்பது எத்திலீன் வாயுதான். மூடிய அறையில் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் எத்திலீன் வாயுவை நிரப்பும்போது... காய்களின் தோல்களில் உள்ள செல்கள் பழுக்கத் தொடங்குகின்றன. கிட்டத்தட்ட இயற்கையாக நிகழும் அதே செயல் ஓர் அறைக்குள் நடக்கிறது. அதனால், எத்திலீன் வாயு மூலமாக பழுக்க வைக்கும் பழங்களை உண்பதால், உடல்ரீதியான பாதிப்புகள் எதுவும் இல்லை. இப்படி பழுக்க வைப்பதை சர்வதேச உணவுக் கழகம் அங்கீகரித்திருக்கிறது'' என்று விளக்கம் தந்தார்.

 வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்காது!
வாழைப்பழம் பற்றி பேசிய கருப்பையா, ''நம்ம ஊர்லதான் 'குளிர் காலத்துல வாழைப்பழம் சாப்பிட்டா சளி பிடிச்சிடும்’னு பயப்படுறோம். உண்மையில வாழைப்பழம் சாப்பிட்டா சளி பிடிக்காது. ஜம்மு-காஷ்மீர்ல மட்டும் குளிர் காலத்துல 200 டன் அளவுக்கு வாழைப்பழம் விக்குது. அங்க மட்டுமில்ல... உலகம் முழுக்க குளிர் காலத்துலதான் அதிகளவுல வாழைப்பழங்கள் விக்குது. குறைஞ்ச விலையில, அதிக சத்துக்களைக் கொடுக்கற வாழைப்பழங்களை அதிகளவுல சேத்துக்கறது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. இதை வெளிநாட்டுக்காரங்க புரிஞ்சுகிட்டாங்க. நாம எப்பப் புரிஞ்சுக்கப் போறமோ...'' என்றார், ஆதங்கத்துடன்.
 
ஆதரவுடன் : துணை இணையத்தளம் | பிபி4யு டெம்ப்ளேட் | என் நூற்பட்டியல்
பதிப்புரிமை © 2014. BusyBee4U - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை All content provided here are copyrighted material of their respective owners. So we take no responsibility of any of its illegal usage.The content provided here is for preview and testing purposes only,We are in no way responsible to copyright issues that pertain throughout any download(s). So if you like anything Buy It!! If you believe you are copyright owner of any content provided on this site and want it to be removed "Contact us On loveanand143@gmail.com" with valid proof of ownership.
வார்ப்புரு மாற்றி சோதனை பக்கம்
பெருமையுடன் இயக்குவது உரிமைகள் பிஸிபீ