0
Related image

தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல்
Image result for தைப்பொங்கல்
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

உழவர் திருநாள்
Related image
தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

மாட்டுப் பொங்கல்
Image result for மாட்டுப் பொங்கல்
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக‘ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

பொங்க வைக்கும் முறை
Related image
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
Image result for சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
 தைப் பொங்கல் பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம் வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம் தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில் விடியும் வேளை நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது. தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் நாள்!
Related image

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

"காதலிக்க முன் இதயம் இருக்கா ..?

என்று பார்க்க முதல் காதல் இருக்கா என்று பாருங்கள் ...!!"   

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 22 பொறியாளன் கனவு.. காதல் கனவானது "

திவ்யா : பிரபு, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

நான் : சொல்லு அம்மு.

திவ்யா :எங்க வீட்டில எனக்கு மாப்பிள பாக்கிறாங்க.

நான் :எப்படியாவது ஒரு வருஷம் தள்ளி போடு அம்மு, அதுக்குள்ள என் படிப்பை எப்படியாவது முடிச்சுடுவேன்.

திவ்யா :படிப்பை முடிச்சா போதுமா பிரபு? எங்க வீட்டில நல்ல செட்டில் ஆனவனான்னு பாக்க மாட்டார்களா?

நான் :என்ன சொல்லற அம்மு? கண்டிப்பா முடிச்சு ஒரு வருசத்தில் வேலைக் கெடச்சுடும். நீதான் உங்க வீட்டில பேசி சம்மதிக்க வைக்கணும்

திவ்யா :கண்டிப்பா வேலை இல்லாத ஒறுத்தன எங்க வீட்டில் ஏத்துக மாட்டங்க..

நான் அதிர்ச்சி ஆனேன். இப்படி ஒரு பதிலை அவளிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.

நான் :அப்போ ஒரே வழிதான். எப்படியாவது ஒரு வருஷம் தள்ளி போடு. அப்புறம் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம். நல்ல வேலை கெடச்சு செட்டில் ஆனதுக்கு அப்புறம் வீட்டில பொய் நின்னா ஏத்துப்பாங்க தான?

திவ்யா :விளையாடறியா பிரபு. ஒரு வேலையும் இல்லாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா , சாப்பாட்டுக்கு என்ன பண்ணறது?”

நான் :அப்போ என்னதான் பண்ணலாம்னு நீயே சொல்லு

திவ்யா :ஒரே வழிதான் இறுக்கு பிரபு, நாம நம்ம காதல மறந்திடறதுதான் சரின்னு தோணுது..

நான் :அம்மு.. என்ன சொல்லறே? என் வாழ்க்கையே நீதான்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்

திவ்யா :ஐயோ மொதல்ல அம்முன்னு என்ன குபிடுரத நிறுத்து, கொஞ்சம் பிரக்டிகலா யோசி. நான் நேத்து நைட்டே இத முடிவு பண்ணிட்டேன்.. அத சொல்லத்தான் இப்போ கூப்பிட்டேன். மறுபடியும் காதல் அது இதுன்னு எனக்குத் தொல்லை கொடுக்க மாட்டன்னு நம்பறேன். பை. சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டாள்.
Image result for tamil love  meme
அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு திரும்ப அழைத்த போது, மொபைல் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அவள் சொன்னபடிபடி அவ வீட்டுக்கெல்லாம் போகவில்லை. அவள் வீட்டுக்கென்ன, கோயம்புத்தூருக்கே போகவில்லை. இந்தப் பிரச்சினையில் மேலும் நான்கு பேப்பர் அரியர் கணக்கில் சேர்ந்தது.

அடுத்த பகுதி  " டிங்கு டைரி - 24 மனதில் இருப்பவள் வெளியேறும் நாள்"......... 


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Related image
“ஆண்கள் காதலிப்பது…. 

நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்…

பெண்கள் காதலிப்பது…. 


பெற்றோர்கள் பிரித்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்…..”

கருத்துரையிடுக Disqus

 
Top