0

பிறந்தநாள் கிழமை பலன் எப்படி கணக்கிடப்ப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
ஜென்ம நட்சத்திரம் : 

ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்பது விதி.

அப்போது, நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில்,அந்த நட்சத்திரம் என்று வருகிறதோ,அந்தநாளை பிறந்த நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி கொண்டாடும் போது, ஒவ்வொரு ஆண்டும் கிழமைகள் மாறுபடும். உதாரணமாக, நீங்கள்

கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் என வைத்துக் கொள்வோம். அது இந்த ஆண்டு திங்கள்கிழமையாக இருக்கலாம். அடுத்த ஆண்டு வியாழன் என மாறலாம். இப்படியே, ஆண்டுதோறும் கிழமை மாறும். அவ்வாறு மாறுபடும் 

கிழமைகளுக்கு ஏற்ப, அந்த ஆண்டிற்குரிய பலன்கள் அமையும் என்கிறது முகூர்த்த சிந்தாமணி என்ற நூல். 

ஞாயிறு - நீண்ட தூர பயணம்

திங்கள் - விருந்து சாப்பாடு கிடைத்தல்

செவ்வாய் - சுறுசுறுப்பு குறைதல்

புதன் - கல்வி அபிவிருத்தி

வியாழன் - நல்ல ஆடைகள் கிடைத்தல்

வெள்ளி - பெண்களின் ஆதரவு

சனி - தைரியக்குறைவு

சனிக்கிழமை:
ஜென்மநட்சத்திரம் வந்தால், சனி ஜென்ம நட்சத்திர சாந்தி செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரலாம் என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top