0

ஹைக் மெசேன்ஜர் ஆனது பிற ஐஎம் ஆப்ஸ்களுக்கு வழி விடும் தன்மை கொண்டது என்பது மிக வெளிப்படையான ஒரு விடயமாகும். பயனர்களுக்கு இடைமுகம் அடிப்படையில், குரல், வீடியோ, மற்றும் கான்பிரசன்ஸ் அழைப்புகள், புதுமையான மற்றும் வெளிப்படையான ஸ்டிக்கர்கள், ஈமோஜிகள், இரகசிய விளையாட்டுகள், மற்றும் பலவற்றை ஹைக் மெசேன்ஜர் நிகழ்த்துகிறது.

அப்படியாக நாம் ஹைக் ஸ்டிக்கர்கள் பற்றி பேசும் போது பல வாட்ஸ்ஆப் பயனர்கள் வாட்ஸ்ஆப்பில் கிடைக்கப்பெறும் ஈமோஜிகள் மட்டுமின்றி ஹைக் ஸ்டிக்கர் போன்ற அம்சத்தையும் விரும்பினால் அது சார்த்த தீர்வு தான் இந்த தொகுப்பு. கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்கள் வாட்ஸ்ஆப்பில் இருந்து ஹைக் ஸ்டிக்கர்கள் அனுப்பவது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.


நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் ஹைக் மெசேன்ஜர் ஆப்தனை இன்ஸ்டால் செய்தவுடன் உள்நுழைந்து செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்ல அங்கு நீங்கள் ஸ்டிக்கீ ஆப்ஷனை காண்பீர்கள் அதை கிளிக் செய்யவும்

வழிமுறை #01
ஹைக் அதன் ஸ்டிக்கீ ஆப்ஷன் மூலமாக ஹைக் ஸ்டிக்கர்களை பிற ஐஎம் பயன்பாடுகளுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. எனவே, நீங்கள் ஸ்டிக்கீ ஆப்ஷனை ஒருமுறை கிளிக் செய்யவும் நீங்கள் உங்கள் தொலைபேசியில் நிறுவப்பட்டுள்ள வேறு ஐஎம் பயன்பாடுகளை அணுக அருகில் தோன்றும் பெட்டியில் வாட்ஸ் ஆப்தனை தேர்வு செய்யவும்.

வழிமுறை #02
இப்போது, நீங்கள் வாட்ஸ்ஆப்பை அணுக வேண்டும். இங்கே நீங்கள் உங்கள் வாட்ஸ்ஆப் ஹோம் பக்கத்தில் ஹைக் ஐகான் இருப்பதை கண்டுபிடிக்க முடியும்.

வழிமுறை #03
இறுதியாக, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு வாட்ஸ்ஆப் சாட் சென்று ஹைக் ஐகானை கிளிக் செய்ய வேண்டியது தான். அது உங்களுக்கு ஹைக் ஸ்டிக்கர்களை காண்பிக்கும். இப்போது குறிப்பிட்ட சாட்டில் தேவையான ஸ்டிக்கரை அனுப்ப அதை வெறுமனே டாப் செய்தால் போதும்.

வழிமுறை #04
இதுவே ஐபோன் பயனர்கள் என்று வரும் போது, ஹைக் பயன்பாட்டில் உள்ள குறிப்பிட்ட ஹைக் ஸ்டிக்கரை லாங் பிரஸ் செய்வதன் மூலம் 'ஷேர் வையா' என்ற ஆப்ஷனை நீங்கள் பெறுவீர்கள் அதை கிளிக் செய்யவும். பின்னர் வாட்ஸ்ஆப்பை தேர்வு செய்ய ஸ்டிக்கர்களை உங்களால் பகிர முடியும்

வழிமுறை #05

கருத்துரையிடுக Disqus

 
Top