0
கார்ப்பரேட் உலகம் துரோகத்தால் நிறைந்தது. நாம் நம்முடைய இளமைப் பருவத்தை அலுவலகத்தில் செலவழிக்கின்றோம். நாம் உண்மையில் நம்முடைய திறமை மட்டுமே நம்மை முன்னேற்றும் என நினைக்கின்றோம். எனினும் உங்களின் வேலையைப் பற்றிய உங்களின் அணுகுமுறை, மிகவும் முக்கியமாக உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு மட்டுமே உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கார்பரேட் உலகத்தில் மிகவும் முக்கியமான ஒன்று உண்டெனில் அது உங்களுக்கு எதிரான சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது மட்டுமே. அதுவே உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். நாங்கள் உங்களை உங்களின் முதலாளி சுரண்டுகின்றார் என்பதைத் தெரிவிக்கும் காரணிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இதில் ஏதேனும் உங்களுக்குப் பொருந்தி வந்தால் இன்றே இப்பொழுதே ஏதேனும் செய்யுங்கள்.

பொருத்தமில்லாத பணிகள்

பொருத்தமில்லாத பணிகள்

நீங்கள் உங்களுக்குச் சற்றும் பொறுப்பு இல்லாத பணிகளை முடிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுவீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் எதற்காகப் பணி அமர்த்தப்பட்டீர்களோ அதற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத பல்வேறு விஷயங்களைக் கவனிக்க நிர்ப்பந்திக்கப்படுவீர்கள்.

அதிக வேலைச் சுமை

நீங்கள் எப்போதும் நிறைய வேலையால் நிரம்பி இருப்பீர்கள். உங்களுக்குக் கடந்த முறை எந்த நேரத்தில் வேலையை வெளியே எழுந்து சென்றோம் என்பது கூட நினைவில் இருக்காது. உங்களை உங்களால் இந்த வார இறுதியில் வாடிக்கையாளர்களின் அவசரத் தேவையை பார்த்துக்கொள்ள வர இயலுமா எனக் கேட்க மாட்டார்கள். மாறாக நீங்கள் வர வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். பொது விடுமுறை கூட உங்களுக்குக் கிடைக்காது.

ஒரு பொழுதும் பாராட்டப்படுவதில்லை

உங்களுடைய முயற்சிகள் எப்போதும் கேலி செய்யப்படும். பாராட்டை விடுங்கள். உங்களுடைய வேலை மிகவும் எளிதானது என நீங்கள் எப்பொழுதும் உணரும் படி செய்யப்படும். உங்களுடைய முதலாளி நீங்கள் அதிகமாக உழைப்பதைப் பற்றி கண்டு கொள்ளாமல், உங்களின் மீது எப்போதும் அதிருப்தியில் இருப்பார். நீங்கள் உங்கள் இலக்குகளைப் பூர்த்தி செய்தாலும் கூட, உங்களின் சேவை போதுமானதாக கருதப்படாது. மேலும் நீங்கள் உங்களின் இலக்கை விட அதிகமாக உழைக்கவில்லையே என சுட்டிக் காட்டப்படுவீர்கள்.

பொய்யான வாக்குறுதிகள்

உங்களுடைய மதிப்பீட்டில் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாம் அதைப் பற்றி பேசப்போகின்றோம். உங்களுடைய வேலையில் உங்களின் இதயம் மற்றும் ஆன்மாவை வைத்து நீங்கள் உழைத்த போதிலும், உங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பது இல்லை. உங்களுடைய முதலாளியால் உங்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறிதிகளும் மறுக்கப்படும். அதை நீங்கள் ஒரு பொழுதும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு வேளை நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளை எடுத்துரைத்தால் அது தவிர்க்கப்படும் அல்லது வெறுமனே புறக்கணிக்கப்படும்.

பாரபட்சம்

உங்களுடைய முதலாளி சில அறியப்படாத தனிப்பட்ட காரணத்திற்காக உங்களை விரும்பவில்லை. அது உங்களைச் சுற்றிய அவரது நடத்தையில் மிகவும் தெளிவாக பிரதிபலிக்கும். உங்களுக்குத் தேவையான திறமைகள் இருந்த போதும் அவர் எப்போதும் அவருக்குப் பிடித்தவர்களையே தேர்ந்தெடுப்பார். உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் குப்பைத் தொட்டிக்கே செல்லும். மற்றவர்களுடைய கருத்துக்கள் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பாராட்டப்படும்.

அங்கீகாரம் கிடையாது

நீங்கள் எப்போதும் மூளையாகச் செயல்படுவீர்கள். ஆயினும் உங்களுக்கு ஒருபோதும் பெயர் கிடைக்காது. நீங்கள் அனைத்து விதமான கடின வேலையைச் செய்வீர்கள், தினந்தோறும் தாமதமாகச் சென்று வேலைக்கும் காலக்கெடுவிற்கும் இடையே கிடந்து அல்லாடுவீர்கள். எனினும் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் ஒருபொழுதும் கிடைக்காது.

எல்லாவற்றிற்கும் நீங்களே பொறுப்பாளி மற்றும் குற்றவாளி

ஏதாவது தவறு நடந்தால், அதற்கு நீங்கள் பொறுப்பாகவிட்டாலும், முதல் இடத்தில் நீங்களே பொறுப்பாக்கப்படுவீர்கள். நீங்கள் ஏதாவது பதில் கூற முயற்சித்தால், உங்களுக்கு முன்னெடுப்பு மற்றும் உரிமை பற்றிய வகுப்பெடுக்கப்படும்.

குற்றவாளியாக்கப்படுவீர்கள்

நீங்கள் வேலை பார்க்கும் கூடுதல் நேரத்திற்காக எப்பொழுதும் பாராட்டப்படமாட்டீர்கள். மாறாக எப்பொழுதாவது ஒரு முறை உங்களின் சில அவசர தனிப்பட்ட வேலைக்காக சீக்கிரமே கிளம்பிச் சென்றால் அதற்காகக் குற்றவாளியாக்கப்படுவீர்கள்.

சாத்தியமற்ற இலக்குகள்

உங்கள் நம்பகத்தன்மை அடிக்கடி சோதிக்கப்படும். அதற்காக நீங்கள் திறமையற்றவர் என அர்த்தமல்ல. உங்களுக்கு அடைய முடியாத இலக்குகள் கொடுக்கப்பட்டு உங்களின் நம்பகத்தன்மை சோதிக்கப்படும். நீங்கள் எப்போதும், சாதிக்கமுடியாத இலக்குகளை அடைய முயற்சி செய்ய நேரத்திற்கு எதிராகப் போராடுவீர்கள். அது கண்டிப்பாக அடைய முடியாத இலக்காகவே இருக்கும்.

குறைவான சம்பளம்

நீங்கள் மிகவும் குறைவான சம்பளம் பெற்று வருவீர்கள். இதைவிட உங்களை கார்பரேட் நிறுவனம் சுரண்டுகின்றது என்பதற்கு எந்த ஒரு பெரிய அடையாளமும் தேவைப்படாது. நீங்கள், தனியாளாக கையாளக்கூடிய வேலை மற்றும் அதனுடைய மதிப்பிற்கு வேறொரு நிறுவனத்தில் உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தை விடக் கண்டிப்பாக தற்பொழுது வேலை பார்க்கும் நிறுவனத்தில் மிகக் குறைவாகவே ஊதியம் பெறுவீர்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top