0


ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாட்டு வீரரும் பதக்கங்களை குவிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். முந்தைய ஒலிம்பிக் போட்டிகளின் சாதனை முறியடிப்புகள், வெற்றி மற்றும் தோல்வி என ஒலிம்பிக் நகரம் பெரும் பரபரப்போடு காணப்படுகின்றது.

முந்தைய ஆண்டை விட அதிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு புதிய கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒலிம்பிக் நீச்சல் குளங்களில் நீருக்கடியில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய டிஜிட்டல் திரையின் பயன்பாடு என்ன??


ஒலிம்பிக் நீச்சல் குளங்களில் பயன்படுத்தப்பட்டு பலரும் கவனிக்கத் தவறிய டிஜிட்டல் திரை நீச்சல் குளத்தின் இடது புறத்தில் பொருத்தப்பட்டிருந்தன.



இவை நீச்சல் வீரர்களைப் பார்க்கும் படி பிரத்தியேகமாக பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒமெகா லேப் கவுண்ட்டர்ஸ் என அழைக்கப்படும் இவை நீருக்கடியில் டிவி திரை போன்று காட்சியளிக்கும்.



இந்த டிஜிட்டல் திரைகள் நீச்சல் வீரர்களுக்கு லேப் எண்ணிக்கையைக் காண்பிக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்த லேப் கவுண்ட்டர்கள் 2015 ஆம் ஆண்டின் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டது.



நீச்சல் குளத்தின் முடிவில் பொருத்தப்பட்டிருக்கும் சதுர வடிவ டச்பேட் கருவிகளில் நேரம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு விடும். வீரர்கள் இந்த டச்பேடினை தொட்டதும் நேரம் நிறுத்தப்பட்டு விடும்.

இதனை விளக்கும் வீடியோவினை பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top