0

எல்லோரா கைலாசநாதர் கோயில் பாறையைக் குடைந்து உருவகம் பெற்ற பண்டைய இந்து மத கோயில்களில் ஒன்றாகும். இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் ஒன்றான இது பெரியதொரு மலையைக் குடைந்து அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன.

இராஷ்டிரகூட அரசன் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) கட்டமைக்கப்பட்டுள்ள இக்கோயில் திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும், பல்லவ கலை பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள வித்தியாசமான கோவில் கட்டமைப்பாகும்..!


மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் போல் இல்லாமல் இது ஒரு முழுமையான ஆலயம் ஒன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவைகள் மட்டுமின்றி எல்லோரா கைலாசநாதர் கோவிலானது தன்னுள் பல ரகசியங்களை கொண்டுள்ளது.
 
பிரம்மாண்டமான மலைத்தளி :
அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய நாகரிகங்கள் மிகவும் மேம்பட்ட மற்றும் அதிநவீனமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டும் பண்டைய தளங்களில் இதுவும் ஒன்றாக நம்பப்படுகிறது.
 
மேம்பட்ட நாகரிகங்கள் :
எட்டாம் நூற்றாண்டிலேயே எந்த விதமான 'நவீன' தொழில்நுட்ப பயன்படும் இன்றி மலைப்பாறைகள் வெட்டி குடைந்து எப்படி கோவிலை வடிவமைத்தனர் என்ற கேள்விக்கு பதிலால் கிடையாது.

கேள்விக்கு பதில் :
சுற்றியுள்ள எல்லோரா குகைப்பாறையில் தோண்டிய 16-வது கோவில் தான் கைலாச நாதர் கோவில் என்பதும் அங்கு மொத்தம் 34 குகைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 34 குகைகள் :
பல ஆராய்ச்சியாளர்கள் கைலாச கோவிலானது செங்குத்து குழி முறையை பயன்படுத்தி கட்டமைக்கப் பட்டுள்ளதாக நம்புகின்றனர். அதாவது அசல் கற்பாறைகள் மேலிருந்து தொடங்கி கீழ்நோக்கி செதுக்குதல்.
 
செங்குத்து குழி முறை :
ஆனால், அதை எப்படி செய்னர்..? எல்லோரா குகைகள் அனைத்துமே பண்டைய இதே செங்குத்து குழி முறையை பயன்படுத்தி உருவாக்கம் பெற்றதா..? சுத்தியல், உளிகள், மற்றும் குத்துக்கோடரி மட்டுமே பயன்படுத்தப்பட்டு இவைகள் உருவாகினவா..?
 
சுத்தியல், உளிகள் :
இந்திய வரலாற்றாசிரியர், தொல்பொருள் மற்றும் 'எல்லோரா' புத்தகத்தின் ஆசிரியருமான எம்.கே. தவலிகர் கருத்தின்ப்படி கைலாசநாதர் கோவில் சன்னதிகள் மற்றும் கைலாச கோவில் ஆனது ஒரே நேரத்தில் தோண்டபடவில்லை. வெவ்வேறு காலகட்டங்களுக்கு சொந்தமான பல கட்டுமான பணிகளின் விளைவாகும்.

பல கட்டுமான பணி :
இதற்கு ஆதாரமாய் கைலாச நாதர் கோவிலின் மேற்கு சுவரில் ஒரு துளை ஜன்னலில் எட்டாம் நூற்றாண்டு பிராமி சித்திர வடிவிலான சமஸ்கிருத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன, இதே போல சில தூண்களில் ஒன்பதாம் நூற்றாண்டு எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
 
சமஸ்கிருத எழுத்துக்கள் :
வெவ்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்டிருந்தாலும் கூட நிச்சயமாக இந்த கண்கவர் குகைகள் சாதாரண சுத்தியல் மற்றும் உளிகளால் மட்டுமே உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை என்பதும் தான் இங்கு சர்ச்சை.
 
வாய்ப்பே இல்லை :
நாகரிகத்தின் வரலாற்றில் மிகவும் சிக்கலான மற்றும் அசாதாரண கட்டமைப்புகள் ஒன்றான கைலாசநாதர் கோவில் கட்டப்பட்ட விளக்கம் தொல்பொருள் ஆய்வாளர்கள் மத்தியில் இன்றும் ஒரு பரபரப்பான தேடல் தான்.

தேடல் :

கருத்துரையிடுக Disqus

 
Top