0


எல்லாமே அமைதியாகவும், நன்றாகவும் போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நிலைமை தலைகீழ் என்பது தான் நிதர்சனம். ஒருபக்கம் அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் விண்வெளி ஆயுதங்களு நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறது,

மறுபக்கம் இயந்திரம் மூலம் இயங்கும் விண்கற்களை உருவாக்கவும், அனைத்து வகையான விண்வெளி யுத்தங்களிலிருந்தும் லேசர் தொழில்நுட்பம் மூலம் உலகை மறைக்கவும் நாசா ஆர்வம் காட்டி வருகிறது..!

உலக நாடுகள் அமைதியான முறையில் செயல்பட விரும்புகிறதா என்பதை விட, இப்போதைய கேள்வி என்னவென்றால் அமெரிக்காவை யுத்த முனைப்பில் செயல்பட வைப்பது யார்.?! ஏன் விண்வெளி ஆயுதங்களும், விண்வெளியில் யுத்தமும் எப்போதும் வெடிக்கலாம் / நடக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது..?

குறி வைத்து திட்டங்கள் :
அமெரிக்கா ஒருபக்கம் தன் விண்வெளி பலத்தை அதிகரித்துக் கொண்டே போக, சீனாவோ செவ்வாய் கிரகத்தை குறி வைத்து திட்டங்கள் வகுகத்துக் கொண்டிருக்கிறது.

தாக்கி அழிக்கும் :
மறுபக்கம் அமெரிக்காவின் முக்கிய எதிரி நாடாக கருதப்படும் ரஷ்யாவோ கடந்து செல்லும் எரிகல் மீது கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் பல்லிஸ்டிக் தொழில்நுட்ப ஏவுகணையை ஏவிப் பார்க்கிறது.

அடுத்த போர்க்களம் :
இப்படியாக ஆய்வு, வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பல காரணங்கள் முன்வைக்கப்பட்டு விண்வெளியானது அடுத்த போர்க்களமாக உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அச்சுறுத்தல்கள் :
மனித அச்சுறுத்தல்கள் ஒருபக்கம் இருக்க, ஸ்டீபன் ஹாக்கிங், யூரி மில்னர் என்னும் மில்லியனர் உடன் இணைந்து வேற்றுகிரக வாசிகளை தேடும் முயற்சியாக சிறிய நானோ விண்கலத்தை விண்வெளிக்கும் செலுத்தியுள்ளார்.

நோக்கம் :
போடோனிக் உந்துவிசை பயன்படுத்தி 15 ஆண்டுகளில் ஆல்பா சென்டாவுரியை பயணிக்கும் நோக்கம் கொண்ட அந்த சிறிய நானோ விண்கலங்கள் மூலம் ஏலியன் வாழ்க்கை மிகவும் அசாத்தியமான முறையில் உறுதி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.

பூமியை மறைக்க :
மனித இனத்திற்கு முன்பாக ஏலியன்கள் பூமி கிரகத்தை கண்டறிந்து தாக்குதல்கள் நிகழ்த்தி விடாது இருக்க அதிபயங்கர லேசர் தொழில்நுட்பம் கொண்டு தூரதேச விண்வெளி பகுதிகளில் இருந்து பூமியை மறைக்கவும் திட்டமிடப்படுகிறது.

விரோத எண்ணம் :
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்தே விண்வெளியை நோக்கி நாம் வானொலி மற்றும் தொலைக்காட்சி சிக்னல்களை செலுத்தி வருகிறோம், அதை வேற்றுகிரக வாசிகள் கைப்பற்றி இருக்கலாம் அவர்கள் விரோத எண்ணம் கொண்டும் இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னிய கலாச்சாரங்கள் :
ஸ்டீபன் ஹாக்கிங்-ன் அன்னிய கலாச்சாரங்கள் சார்ந்த ஆய்வை பொருத்தமட்டில் நம்மை தவிர்த்து விண்வெளியில் வாழும் பிற உயிரினங்கள் பெரும்பாலும் விரோத எண்ணம் கொண்டவைகளாகத்தான் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நுழையும் ஆயுதங்கள் :
ஆக, பூமி கிரகத்தில் உருவாகி விண்வெளிக்கும் நுழையும் ஆயுதங்கள் எல்லாமே ஏலியன்களுக்கானது என்றும், நாசா மற்றும் பென்டகன் ஏலியன்களை பற்றி மட்டும்தான் கவலை படுகிறது என்றும் அர்த்தம் கொள்ளக் கூடாது.

பின்னுக்கு தள்ள :
விண்வெளி ஆய்வில் ஒரு பெரிய அளவிலான முயற்சிகளையும், லட்சிய திட்டங்களையும் நிகழ்த்தி அமெரிக்காவின் நாசாவை பின்னுக்கு தள்ள திட்டமிடுகிறது சீனா..!

அவசர நிலை :
அமெரிக்காவின் ராணுவ செயற்கைகோள்களை தாக்கி வீழ்த்தும் ஆன்ட்டி -சாட்டிலைட் ஏவுகணைகளை சீனா ஏற்கனவே பரிசோதனை செய்து முடித்து விட்டது, அதுமட்டுமின்றி அவசர நிலை என்றால் அமெரிக்க தரை தளங்களையும் தகர்க்க சீனா தயாரக உள்ளது.

செயல் இழக்க வைக்கப்படும் :
அமெரிக்கவின் அதிநவீன விண்வெளி அமைப்புகள் எப்போது வேண்டுமானால் தாக்கப்பட்டு செயல் இழக்க வைக்கப்படும் நிலையில் உள்ளது, அதற்காக 144 மில்லியன் டாலர்கள் செலவில் கவுன்டர் கம்யூனிக்கேஷன்ஸ் சிஸ்டம் அமைக்கலாமா என்று அமெரிக்கா திட்டமிடுகிறது.

முடிவுக்கு வரலாம் :
ஏலியன்கள், உலக நாடுகளின் பகை ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் விபரீதமான எரிகல் அல்லது குறுங்கோள் மூலம் பூமி கிரகம் முடிவுக்கு வரலாம் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கோள் பாதுகாப்பு அமைப்பு :
அதனால் தான் பல விண்வெளி முகமைகள் பல பில்லியன் டாலர்கள் செலவில், கோள் பாதுகாப்பு அமைப்பை (planetary defense system) உருவாகும் முனைப்பில் உள்ளன.

தாக்கலாம் :
பூமி கிரகத்தை நோக்கி வரும் எரிகல்லை ரோபோட்-பவர்டு ஆஸ்ட்ராய்ட் மூலம் தாக்கலாம், தடுக்கலாம் என்ற இயற்கை உடன் ஆன விண்வெளி யுத்தம் நிகழவும் வாய்ப்புகள் அதிகம்.

கை ஓங்கி இருக்கும் :
இப்படியாக, சாத்தியமான ஒரு விண்வெளி யுத்தம் ஏற்பட உலக நாட்டு பகை, ஏலியன்கள், இயற்கை என எது காரணமாக இருப்பினும் அந்த யுத்தத்தில் நாசா மற்றும் பென்டகனின் கை ஓங்கி இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமேயில்லை.

அடுத்த நொடி :
இதெல்லாம் நடக்க 20-30 ஆண்டுகள் ஆகும் என்று நாம் நினைதுக் கொண்டிருக்கும் அதேவேளையில் விண்வெளியில் கால்பதித்துள்ள ஒவ்வொரு உலக நாடும் சாத்தியமான ஒரு விண்வெளி யுத்ததிற்கு அடுத்த நொடி வரையிலாக தயாராக இருக்கிறது என்பது தான் நிதர்ச்னம்.

கருத்துரையிடுக Disqus

 
Top