0

ஏமாறுவது குற்றமல்ல, மீண்டும் மீண்டும் ஏமாறுவது தான் பெரிய குற்றம்.! பரந்து விரிந்த ஆன்லைன் கடலில் பல நன்மைகளும் இருக்கின்றது, நன்மையை விட தீயதும் அதிகமாகவே இருக்கின்றது. இங்கு கவனமாக இல்லையெனில் நமக்கும், நமது தரவுகளுக்கும் ஆபத்து நிச்சயம்.
உலகில் சுமார் 50% பேர் இன்று வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இது அந்நிறுவனத்திற்கு பெருமைான விடயம் என்றாலும் இதில் பல்வேறு ஆபத்துகளும் இருப்பதே உண்மை. இங்கு பல்வேறு ஆன்லைன் முறைகேடுகளில் இருந்து உங்களை பாதுகாத்திடும் வழிமுறைகளை தான் தொகுத்திருக்கின்றோம்..!

ஹேக்கர்
பயனர்களின் தரவுகளை திருட ஆன்லைனில் கூட்டமே ஆவலோடு காத்திருக்கின்றது. இவர்களின் முழு நோக்கமும் தரவுகளை திருடுவது மற்றும் மால்வேர் மூலம் கருவிகளை பழுதாக்குவது மட்டும் தான்.

தளம்
பொதுவாக ஹேக்கிங் என்பது மிகப்பெரிய இணையம் அல்லது பிரபலமான நெட்வர்க்'களை குறி வைத்து மேற்கொள்ளப்படும். இங்கு தான் அதிகப்படியான தரவுகளும் கிடைக்கின்றன. இதன் காரணமாக பிரபல இணைய நிறுவனங்கள் அடிக்கடி ஹேக்கர்களால் சிரமத்திற்கு ஆளாகின்றன.

வாட்ஸ்ஆப்
அந்த வகையில் உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் நாள் தோறும் பல்வேறு ஹேக்கிங் முயற்சிகளையும், மால்வேர் சவால்களையும் சந்தித்து வருகின்றது. இதனை ஓரளவு சமாளித்தாலும், மற்ற வழிகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டே இருப்பது தான் உண்மை.

வாட்ஸ்ஆப் கோல்டு
அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் தற்சமயம் பரவி வரும் புதிய அச்சுறுத்தல் தான் வாட்ஸ்ஆப் கோல்டு . இம்முறை வாட்ஸ்ஆப் பயனர்களின் கருவிகளில் மால்வேர் மூலம் பிழை ஏற்படுத்தும் முயற்சி தான் நடைபெற்று வருகின்றது.

வழிமுறை
ஆன்லைனில் இது போன்ற முறைகேடுகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்களை தான் இனி வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

வழிமுறை 01
ஆன்லைன் முறைகேடுகளில் இது தான் இப்போதைய ட்ரென்ட். அதிக சலுகைகளை வழங்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கோருவது. பொதுவக இதுபோன்ற செயலி இருக்காது, மாறாக பதிவிறக்கம் செய்ய கோரும் பட்டனை க்ளிக் செய்தால் மால்வேர் அல்லது வைரஸ் பதிவிறக்கம் செய்யப்படும்.

வழிமுறை 02
ஸ்மார்ட்போனிற்கு மால்வேர் மற்றும் வைரஸ் பதிவிறக்கம் செய்யப்படாமல் இருக்க செயலிகளை அதிகாரப்பூர்வமான ப்ளே ஸ்டோர்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறை 03
ஆன்லைன் முறைகேடுகள் பெரும்பாலும் அறிமுகமில்லாத லின்க்'களை க்ளிக் செய்ய கோரும். முடிந்த வரை உங்களுக்கு தெரியாத அல்லது விசித்திரமான தகவல்களுடன் வரும் லின்க்களை க்ளிக் செய்ய வேண்டாம்.

வழிமுறை 04
ஆன்லைனில் இலவச சலுகைகளை வழங்குவதாக கூறும் எவ்வித சேவையையும் நம்ப வேண்டாம். உங்களுக்கு நன்கு அறிமுகமான சேவைகளை தவிர்த்து புதிய சேவைகளை நம்பினால் உங்களது தரவுகளை இழக்க நேரிடும்.

வழிமுறை
புதிய ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும் போது ஃபேஸ்புக், மின்னஞ்சல் போன்ற முகவரிகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும். மாறாக புதிய லாக் இன் செய்வது உங்களுக்கும் உங்களது தரவுகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top