0
சூர்யாவை நம்பி சூப்பர் "சரவணா ஸ்டோர்" போனேன் சூர்யா சொன்ன மாதிரியே கடையும் சூப்பர் கூடவே கேர்ள்சும் சூப்பர் சட்டை விலை 975 அடித்து 900 only யாம்,
..
கார்த்தி வேற கூப்டாரே "சென்னை சில்க்ஸ்" போனேன் என்ன அழகு காஜலும், மீனாட்சியும் வாசலில் நின்னு கூப்டாங்க(பேனர்ல) சரவணா ஸ்டோர்ல பார்த்த அதே சட்டை விலை 1250 ஏசில காத்து வாங்கிட்டு ஒடி வந்துட்டேன்.
..
நம்பிக்கை நம்பிக்கைனு கமல் சொன்னது ஞாபகம் வர "போத்திஸ்" போனேன் பார்ரா அங்கயும் அந்த சட்டை விலை 1375 ,கடையில் இருந்த கமல் போட்டா பார்த்து விட்டு நாமளும் இதே மாதிரி மீசை வைக்கனும்னு நினைச்சுட்டே வெளியே வந்தேன்.
..
தீபாவளி சட்டை எடுத்தாகனுமே வீட்ல 1000 ரூபாய்க்கு கணக்கு சொல்லனும் what a miracle பிளாட்பாரத்துல அதே சட்டை அதே டிசைன் அதே quality விலை 220 சார் 200 போட்டு தரேன் ஆனா கவர் இல்லை - கடைக்காரர்.
..
சந்தோசமா வாங்கிட்டு வீட்ல யாரும் பாக்குறதுக்குள்ள RMKV கவர்ல வச்சி சாமி முன்னால வச்சாச்சி இந்த வருச தீபாவளி Finish 
..
ஒன்னு மட்டும் கேட்டுக்கோங்க எவனையும் நம்பி எந்த கடைக்கும் போகாதீங்க.

கருத்துரையிடுக Disqus

 
Top