0

கேரளா மாநிலத்தின் புகழ் பெற்ற இனிப்பு வகை தான் நெய்யப்பம். இந்த இனிப்பு வகை கூகுள் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயராக சூட்டப்படலாம். இதன் சிறப்பு தகவல் இதற்கு நீங்களும் வாக்களிக்க முடியும் என்பது தான்.

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு இனிப்பு வகை பெயர்களை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு கப்கேக் பதிப்பில் துவங்கி இறுதியாக மார்ஷ்மல்லோ வரை வந்திருக்கின்றது.

ஆண்ட்ராய்டு என்
கூகுள் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ஆண்ட்ராய்டு என் பெயர் சூட்டப்படாமல் இருக்கின்றது. எனினும் பெயர் தேர்வு செய்யவதற்கான வாக்குப்பதிவு கூகுள் தளங்களில் துவங்கியுள்ளது.

பரிந்துரை
அந்த வகையில் ஆண்ட்ராய்டு என் பெயரை தேர்ந்தெடுக்க https://www.android.com/intl/en_in/versions/name-n/ என்ற இணையதளம் சென்று உங்களுக்கு பிடித்த பெயரை டைப் செய்து சமர்பிக்க கோரும் 'submit' என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

பெயர்
அதன் படி ஆண்ட்ராய்டு என் பெயர் பரிந்துரை பட்டியலில் நெய்யப்பம், நார்ஷ்மல்லோ, நம் பீன், நட்ஸ் அன்டு நச்சோஸ் உள்ளிட்ட பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

வாக்குறுதி
கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை, புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு இந்திய பெயர் ஒன்றை பரிந்துரை செய்ய வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாக்கு
பெயரினை தேர்வு செய்யும் ஆன்லைன் வாக்குப்பதிவு துவங்கியது முதல் நெய்யப்பம் அதிக வாக்குகளை பெற்ற பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது.

பிரபலம்
புதிய ஆண்ட்ராய்டு பெயர் நெய்யப்பம் ஆக தேர்வு செய்ய விளம்பரம் செய்ய www.androidneyyappam.com என்ற முகவரியில் இணையதளம் ஒன்றை மூன்று கேரள வாலிபர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த இணையதளம் நாள் ஒன்றிற்கு 3000 பேர் வந்து செல்வதாக கூறப்படுகின்றது.

விளம்பரம்
இதோடு கேரளா சுற்றுலா துறை சார்பிலும் இதற்கான விளம்பரங்கள் ட்விட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை நெய்யப்பம் என்ற பெயரை கூகுள் தேர்வு செய்யும் பட்சத்தில் ஆண்ட்ராய்டு பெயர் பெற்ற முதல் இந்திய பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முடிவு
புதிய ஆண்ட்ராய்டு பெயரை தேர்வு செய்யும் வாக்குப்பதிவு ஜூன் 9 ஆம் தேதி மதியம் 12.29 மணிக்கு நிறைவடைகின்றது. இதன் பின் தேர்வு செய்யப்பட்ட புதிய பெயரை கூகுள் அறிவிக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top