0

மனிதர்கள் செய்து வரும் கடிமான பணிகளை எளிமையாக்கவும், குறைந்த நேரத்தில் செய்து முடிக்கவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கடந்த காலம். அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது தான் ட்ரென்ட் ஆக இருக்கின்றது. 

அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் சொத்துலையும் ரோபோட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய ஜப்பான் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. அதன் படி ஜப்பானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று விவசாயம் செய்ய மனிதர்களை தவிரத்து ரோபோட்களை பயன்படுத்த முடிவு செய்திருக்கின்றது. 

uimiGAy.jpg

கீரை 

தாணியங்கி ரோபோட்களை கொண்டு கீரை வகைகளை பயிர் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

mdSikg8.jpg

ஜப்பான்

நம்ம ஊர்களை போல் இல்லாமல் கட்டிங்களினுள் பயிர் செய்ய கியோட்டோ சார்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

hM92ECu.jpg

துவக்கம்

2017 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த திட்டத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளதோடு முதலில் நாள் ஒன்றுக்கு 30,000 கீரை தலைகளை பயிர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் கீரை தலைகளை பயிர் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

mgEvBG2.jpg

இடம்

முற்றிலும் சீலிங் செய்யப்பட்ட சுமார் 47,300 சதுர அடி இடத்தில் அடுக்கடுக்கு முறையில் பயிர் செய்யப்பட இருக்கின்றது, விதை விதைப்பதை மட்டும் மனிதர்கள் செய்வதோடு மற்ற அனைத்து பணிகளையும் வணிக ரோபோட்கள் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

7HA2uJV.jpg9uwLobt.jpg

கட்டணம் 

ரோபோட்களை பயன்படுத்துவதன் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் பாதியாக குறையும் என அந்நிறுவன அதிகாரியான கோஜி மொரிசதா தெரிவித்தார். 

e5CKmPG.jpg

ரோபோட்

ரோபோட்களின் மேல் அதிக காதல் கொண்டிருக்கும் ஜப்பானில் ஏற்கனவே பல நிறுவனங்களில் பணி செய்ய ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக Disqus

 
Top