0
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் காலத்துல இங்க இண்டர்நெட் இல்லாமல் யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலைமையில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக கூறும் பல்வேறு இண்டர்நெட் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டி வருகின்றன.

இதனால் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் என்றாலும் வாடிக்கையாளர்கள் தடையில்லா இண்டர்நெட் முழுமையாக பயன்படுத்த முடிகின்றதா என்றால் இல்லை என்பதே இங்கு பலரின் பதிலாக இருக்கின்றது. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வீட்டில் தடையில்லாமல் வை-பை பயன்படுத்துங்கள்..

 
தரை வை-பை ரவுட்டரை தரையில் வைத்திருந்தல் அதனினை முதலில் சற்றே உயரமான இடத்தில் வைத்திடுங்கள்.

 

இடம் வை-பை ரவுட்டரை முடிந்த வரை வீட்டின் நடு அறையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ரவுட்டர் வை-பை சிக்னல்களை வீட்டின் அனைத்து திசைகளிலும் பரவும் படி செய்யும், இதனால் சிக்னல் சீராக பயன்படுத்தப்படுவதோடு பாழாகமல் இருக்கும்.

 
அறை நீங்கள் அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்தும் அறையிலும் வை-பை ரவுட்டரை வைக்கலாம், பொதுவாக ரவுட்டர் இருக்கும் இடத்தில் சிக்னல் சீராக இருக்கும்.

 
பொருள் உங்களது வை-பை ரவுட்டரை எவ்வித பொருட்களும் மறைக்காத படி பார்த்து கொள்ள வேண்டும். ரவுட்டரை சுற்றி எவ்வித பொருட்கள் இருந்தாலும் அது சிக்னல் பரவுவதை தடுக்கும்.
 
மின்சாதன பொருட்கள் வை-பை ரவுட்டர் அருகில் பொதுவாக எவ்வித மின்சாதன பொருட்களையும் வைக்க கூடாது. பெரிய இரும்பு பொருட்கள் சிக்னல்களை பாதிக்கும்.

 
திசை வை-பை ரவுட்டரை வெவ்வேறு திசையில் மாற்றி வைத்து சோதனை செய்யுங்கள், இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட திசையில் இண்டர்நெட் வேகம் சீராக இருக்கும்
 
சிக்னல் சந்தையில் கிடைக்கும் பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வை-பை சிக்னல் அளவை தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் சிக்னல் குறைவாக கிடைக்கும் இடத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

 
வேகம் ஈத்தர்நெட் கேபிள் கொண்டு கணினியில் இண்டர்நெட் வேகத்தை சோதனை செய்யுங்கள், இவ்வாறு செய்யும் போது ரவுட்டரில் ஏதும் கோளாறு இருந்தால் அதனினை அறிந்து கொள்ள முடியும்.

 
பயன்பாடு வை-பை ரவுட்டரில் சாதாரண பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது ஹேக்கர்களுக்கு உங்களது பாஸ்வேர்டினை ஹேக் செய்வது மிகவும் எளிமையாக இருக்கும், இதனால் முடிந்த வரை WPA பாஸ்வேர்டு செட் செய்து கொள்ளுங்கள்.

 
செயலி உங்களது வை-பை பேண்ட்வித் அதிகமாக பயன்படுத்தி உங்களது இண்டர்நெட் வேகத்தினை குறைக்கும் செயலிகளை அறிந்து கொள்ள QoS- Quality Of Service பயன்படுத்தலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top