0
எமதர்ம ராஜன், நரகத்தின் தலைவன், மக்களின் பாவப் புண்ணியங்களை சரி பார்த்து அவர்களை சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் அனுப்புபவர். பாசக் கயிறை கொண்டு உயிர்களை பறிப்பது இவரது தொழில் என்பன நாம் அறிந்தது. இவரிடம் நமது நாட்டின் மூன்று நல்ல அரசியல்வாதிகள் ஒருமுறை சிக்குகிறார்கள்.

மூவரும் நல்லவர்கள், மக்களுக்கு நல்லதை செய்தவர்கள், புண்ணியம் நிறைய சேர்த்து, சொர்க்கத்தை எதிர்பார்த்து எமலோகத்தில் காத்திருந்தனர். ஆனால், இருவருக்கு மட்டும் சொர்க்கமும், ஒருவருக்கு நரகமும் என நீதியளித்தார் எமன். அது ஏன்? இந்த கதையின் மூலம் தெரியவரும் கருத்து என்ன என்று இனிக் காணலாம்..

மூன்று அரசியல்வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் திடீரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள். மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது.

மூவரும், மேலோகம் சென்றார்கள். அங்கு யமதர்ம ராஜா அமர்ந்து எல்லோருடய பாவ, புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கிக் கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும், பகட்டான தோற்றம் அளித்தார்.

பயந்து கொண்டே இந்த மூவரும் தனித் தனியே அவர் அருகே செல்ல, முதல் இருவரையும் சொர்க்கத்துக்கு போக சொன்னார், இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆனால், மூன்றாவதாக உள்ளவரை நரகத்துக்கு அனுப்பிவிட்டார்.


மூன்றாம் நபருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அவர் யமதர்ம ராஜாவிடம் சென்று நாங்கள் மூவரும் மக்களுக்கு தொண்டு புரிந்துள்ளோம். அப்படி இருந்தும் ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை என்று வினவ, உடனே எமதர்ம ராஜா அவர் கேட்டுக் கொண்டமைக்கு, உங்கள் மூவருக்கும் போட்டி வைக்கிறேன். நீயே போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய் என்று மூன்றாவது நபரிடம் எமதர்ம ராஜா உரைத்தார்.


நான் உங்கள் மூவருக்கும் முதலில் எழுத்து முறை தேர்வு வைக்கிறேன்.

முதல் போட்டி ஆரம்பம்...

நபர் 1 - ஆங்கிலத்தில் INDIA என்று எழுத சொன்னார். - பாஸ் பண்ணிவிட்டார்.

நபர் 2 - ஆங்கிலத்தில் ENGLAND என்று எழுத சொன்னார். - பாஸ் பண்ணிவிட்டார்.

நபர் 3 - ஆங்கிலத்தில் CZECHOSLOVAKIA என்று எழுத சொன்னார். அந்த தலைவருக்கு தெரியவில்லை. பாஸ் ஆகவில்லை.

மறுபடியும் அந்த மூன்றாவது நபர் மன்றாடி யமதர்ம ராஜாவிடம் ஒரு சான்ஸ் கேட்டார். அதற்கும், அப்படியே ஆகட்டும் என்று சொன்னார்.

இது தான் கடைசி சான்ஸ் என்பதால், இந்த போட்டியில் எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்று அவர் மனதில் ஒரு வெறி.

இரண்டாவது போட்டி

நபர் 1 - எப்பொழுது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது ? 1947என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார்.

நபர் 2 - அந்த போராட்டத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள் என்று கேட்டார். அதற்கு அவர் மூன்று ஆப்ஷன் தந்தார் . 1,00,000 - 2,00,000 - 3,00,000. 2,00,000 என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார் நபர் 2.

நபர் 3 - அந்த 2,00,000 வீரர்களுடைய விலாசம் கேட்டார். அந்த மூன்றாவது நபர் அதிர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்டு நரகத்தை அடைந்தார்.

கதை சொல்லும் நீதி

"மானேஜ்மென்ட் ஸ்கெட்ச் போட்டுட்டாங்கனா தூக்காம விடமாட்டாங்க!!!

எமன் தான் மேனேஜ்மெண்ட், அரசியல்வாதிகள் தான் அலுவலர்கள். நீங்கள் என்னதான் ப்ராஜக்ட் நிறைய நன்றாக செய்தலும் கூட (மக்களுக்கு தொண்டு), மேனேஜ்மெண்ட் மனது வைத்தால் தான் ப்ரொமோஷன், இல்லையேல் "பிங்க் ஸ்லிப்" தான்.

கருத்துரையிடுக Disqus

 
Top