0


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் முதலிடத்தினைப் பிடித்துள்ளனர். இந்த முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதத்தினை எட்டியுள்ளனர். தஞ்சை அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தமிழில் 100/99 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 100/100 மதிப்பெண்களும் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். SSLC results released in TN பெரம்பலூர் அரசு பள்ளியைச் சேர்ந்த பாரதிராஜவும், சேலம் வாழப்பாடி அரசுப் பள்ளி ஜெயநந்தனாவும் இதே மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு 41 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 192 பேர் 2வது இடத்தினைப் பிடித்துள்ளனர். 497 மதிப்பெண்களுடன் 540 பேர் 3வது இடம் பிடித்துள்ளனர். இத்தேர்வு முடிவுகளில் 6 அரசுப் பள்ளி மாணாக்கர்கள் 2வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு தேர்வு முடிவுகளில் 15 பேர் முதலிடம் பிடித்திருந்தனர். இந்த முறை 41 பேர் பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

கருத்துரையிடுக Disqus

 
Top