0

zzutfkC.jpg


பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணைய தளமான பேஸ்புக், தன் வாடிக்கையாளர்களின் குழந்தைகள் மற்றும் பிரியமானவர்களின் போட்டோக்களை, ஒழுங்கு படுத்தி சரியாக அமைத்திட, அண்மையில் ஒரு வழியைத் தந்துள்ளது. நம் பேஸ்புக் பக்கத்தில் போட்டோக்களை அமைத்திடுகையில், அவை பல ஆல்பங்களில் சிதறியாவாறு அமைக்கப்படும். சில வேளைகளில், நம் குழந்தைகளின் போட்டோக்களை, நம் மனைவியும் கூட பதிக்கலாம். இவை எல்லாம், வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு தகவல்களுடன் அமைக்கப்படுவதால், நிச்சயம் நம் அக்கவுண்ட் பக்கங்களில் சிதறியவாறு தான் காட்டப்படும். இவற்றைச் சரியாக அமைக்க ஒரு வழி தரப்பட்டுள்ளது.

நம் குழந்தைக்கெனத் தனியே ஒரு பக்கம் அமைக்க முடியாது. ஏனென்றால், பேஸ்புக் தளத்தின் விதிகளின்படி, குழந்தைகள், சிறார்கள், குறிப்பிட்ட வயதிற்குப் பின்னரே தங்களுக்கென ஒரு தளப்பக்கம் அமைத்துக் கொள்ள முடியும். எனவே, ஒரு குழந்தையின் போட்டோவினை நீங்கள் டேக் (tag) செய்திட முடியாது. எனவே, குழந்தைகளின் போட்டோக்களை நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ள ஸ்பெஷல் டேக் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு scrapbookல் புகைப்படங்களை இணைக்கலாம். இதற்கென ஒரு ஸ்பெஷல் டேக் ஒன்றையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

முதலில் ஸ்க்ரேப் புக் ஒன்றை உருவாக்கிய பின்னர், நீங்களும் உங்கள் மனைவியும் இதற்கு கூட்டு சொந்தக்காரர்களாக இருக்கலாம். (இதற்கு உங்கள் மனைவி, பேஸ்புக்கில், உங்களுடன் தொடர்பு கொண்டவராக இருக்க வேண்டும்) நீங்கள் அமைக்க இருக்கும் ஸ்பெஷல் டேக் எந்தப் பெயரிலும், உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம். அது குழந்தையின் பெயராகவோ, அல்லது ஏதேனும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் செல்லப் பெயராகவோ இருக்கலாம். இதன் பின்னர், நீங்களோ அல்லது உங்கள் மனைவியோ, எந்த போட்டோக்களை டேக் செய்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெற்றோர்கள் மட்டுமே, குழந்தையின் படங்களை டேக் செய்திட முடியும்.


முதலில் ஸ்க்ராப் புக் (scrapbook) ஒன்றைத் தொடங்க வேண்டும். இதற்கு பேஸ்புக்கில் உங்களின் தனிப் பக்கத்திற்குச் செல்லவும். அங்கு About என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Family & Relationships என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Keep Photos of Kids in One Place என்று ஓர் இடத்தில் தரப்பட்டிருக்கும். இங்கு உள்ள Get Started என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது, உங்கள் குழந்தையின் பெயர், அல்லது நீங்கள் விரும்பும் பெயரைத் தர ஆப்ஷன் தரப்படும். (நீங்கள் ஆசையாய் வளர்க்கும் கிளியின் பெயரைக் கூடத் தரலாம்). உங்கள் பேஸ்புக் தகவல்களில், நீங்கள் திருமணமானவர் எனக் குறிப்பிட்டிருந்தால், உங்கள் மனைவி / கணவனை டேக் செய்திட அனுமதிக்க விரும்புகிறீர்களா? என்று ஓர் ஆப்ஷன் தரப்பட்டு, அதற்கான விபரங்கள் பெறப்படும். 


வேறு யாரும் போட்டோக்களை டேக் செய்திட அனுமதி தரப்பட மாட்டாது, நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியின் பெயரைத் தந்தால், அது பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட்டில், நட்புடன் உள்ளதா எனச் சோதனை செய்யப்படும். அவ்வளவுதான்! இனி போட்டோக்களை இணைத்து அவற்றை டேக் செய்திடலாம். இதற்கு Tag photos என்பதில் கிளிக் செய்திட வேண்டும். ஏற்கனவே, பேஸ்புக்கில் உள்ள, உங்களின் குழந்தைகளின் போட்டோக்களையும் டேக் செய்திடலாம். இவை அனைத்தும் முதலில் உருவாக்கிய ஸ்க்ரேப் புக்கில் இணைக்கப்படும்

கருத்துரையிடுக Disqus

 
Top