0
rfdURag.jpg




வாரத்திற்கு ஒரு புதிய மொபைல் ஸ்மார்ட் போன் மாடல் வெளியாகி வருகிறது. இவற்றின் சிறப்புகளில் ஒன்றாக, ஸ்டோரேஜ் எனப்படும் தேக்கக் கூடிய மெமரி பேசப்படுகிறது. ஒரே போன் மாடலில், 16, 32, 64 ஜி.பி. என இதன் தேக்க மெமரியின் அடிப்படையில், மாடல் எண்களும், விலையும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால், உண்மையிலேயே இந்த ஸ்மார்ட் போன்களில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிற அப்ளிகேஷன்கள் எடுத்துக் கொண்ட தேக்க மெமரி போக, நமக்கு பயன்பாட்டிற்கு எவ்வளவு மெமரி தரப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக, குறிப்பிடப்பட்ட அளவு கிடைக்காது. ஆனால், எவ்வளவு கிடைக்கிறது என்று யாரும் கவலைப்படுவதில்லை.


அண்மையில், ஆப்பிள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர் ஒருவர் வழக்கு தொடுத்தார். அவருடைய குற்றச்சாட்டின்படி, ஐ.ஓ.எஸ்.8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்,தேக்க மெமரியில் 23%க்கு மேல் எடுத்துக் கொள்கிறதாம். இதே சிஸ்டம், ஐ.ஓ.எஸ்.7 லிருந்து அப்கிரேட் செய்யப்பட்டால், மேலும் 1.3 ஜி.பி. இடம் கேட்கிறதாம். இந்த வழக்கின் அடிப்படையில், மொபைல் போன் சந்தையில் விற்கப்படும் முன்னணி நிறுவனங்களின் மாடல்கள் சிலவற்றை ஆய்வு செய்ததில், இவற்றின் உண்மை நிலை தெரிய வந்தது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

இந்த கேள்விக்கு நாம் எளிதாக விடை பெற இயலாது. ஏனென்றால், நாம் இதில் சிம் கார்டினை நுழைத்தவுடன், நமக்கு மொபைல் தொடர்பு சேவையினை வழங்கும் நிறுவனங்களும், இதில் குறிப்பிட்ட அளவினைப் பயன்படுத்தி, தங்கள் இயக்கம் சார்ந்த சில அப்ளிகேஷனைப் பதிகின்றன.


முன்னணியில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், ஆப்பிள் ஐபோன் 5சி மாடல் தான் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறது. கொடுக்கப்படும் 16 ஜி.பி. இடத்தில், 12.6 ஜி.பி. சிஸ்டம் மற்றும் பிற அப்ளிகேஷன்கள் எடுத்துக் கொள்கின்றன. அடுத்து கூகுள் நெக்சஸ் 5 மாடல் தனக்கென எடுத்துக் கொள்ளும் இடம் அதிகம். மூன்றாவதாக, ஐபோன் 5 எஸ் இடம் பிடிக்கிறது. இது எடுத்துக் கொள்ளும் இடம் 12.2 ஜி.பி.

இந்த வகையில், மிகக் குறைவான இடம் எடுத்துக் கொள்ளும் மொபைல் போன் சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி எஸ்4. இது 16 ஜி.பி. இடத்தில், 8.56 ஜி.பி. எடுத்துக் கொள்கிறது. ஆப்பிள் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் தந்துள்ள தகவல்படி, ஐபோன் 6 ப்ளஸ் 12.7 ஜி.பி. இடத்தை மட்டுமே விட்டு வைத்துள்ளது. ஐபோன் 6, 13 ஜி.பி. இடத்தை நாம் பயன்படுத்தத் தருகிறது. 



zvZbKpq.jpg

இதற்கெல்லாம் காரணம், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமின்றி, நிறுவனங்கள் தாமாக பதிந்து தரும் சில அப்ளிகேஷன் புரோகிராம்களும் தான். இத்தகைய புரோகிராம்களுடன், ஸ்கின் என சில தரப்பட்டு அவையும் அதிக இடம் எடுத்துக் கொள்கின்றன. இது போல சில ஆடம்பரங்களும் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், இடத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் வரிசையில் இறுதியாக உள்ள சாம்சங் காலக்ஸி எஸ்4 மாடலில் தான், அதிக ஆடம்பர அப்ளிகேஷன்கள் உள்ளன.

இதில் நமக்கு ஏமாற்றம் தருவது, மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைக்க போர்ட் இல்லாமல் வரும் போன் மாடல்கள் தான். இதில் ஆப்பிள் நிறுவன போன்கள் குறிப்பிடத்தக்கவை.

கருத்துரையிடுக Disqus

 
Top