0
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவன் சுபம் பேனர்ஜி, 13 வயதிலேயே இளம் தொழிலதிபராக உருவெடுத்துள்ள மூளைக்காரன்.

2014--ஆம் ஆண்டு பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்காக புதிதாக புராஜெக்ட் ஒன்றை செய்ய நினைத்தவனுக்கு, பார்வையற்றவர்களுக்கு உதவும்வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. 'பார்வையற்றவர்கள் எப்படி படிப்பார்கள்?' என்று பெற்றோரிடம் கேள்வியெழுப்ப, 'நீயாகவே கூகுள் செய்துபார்' என்று சொல்லிவிட்டனர்.



கணினியும் இணையமும் கைகூட, தேடுதலை தீவிரப்படுத்திய சுபத்துக்கு, இன்னொரு விஷயமும் புலப்பட்டது. 

பார்வையற்றோருக்கான அச்சுப்பிரதிகளை எடுப்பதற்கு பயன்படும் பிரைலி பிரின்ட்டர், மிக அதிக விலையில் இருப்பதால் வளரும் நாடுகளில் இதனைப் பயன்படுத்துவது மிகக்குறைவு என்பதை தெரிந்து கொண்டான். எனவே, பார்வையற்றவர்களுக்காக 'லேகோ' என்னும் ரோபாட்டிக் உதவியுடன் விலையும், எடையும் குறைந்த பிரைலி பிரின்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான் சுபம்.
''பார்வையற்றவர்களுக்காக புதிதாக ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்பான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதனால் அவனைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தோம். சாதித்துவிட்டான்'' என்று சொல்லும் சுபத்துடைய தந்தை நினாய் பேனர்ஜி, அவனுக்கு கொடுத்த 35,000 டாலர் மூலமாக, ‘பிரைகோ 2.0Õ எனும் விலை குறைந்த பிரைலி பிரின்டரை உருவாக்கிவிட்டான். பிரைலி மற்றும் லேகோ எனும் இரண்டு பெயரின் இணைப்புத்தான் பிரைகோ. இதேபெயரில் நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறான்.

தற்பொழுது இன்டெல் நிறுவனம், சுபத்துடைய இந்த பிரைகோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது!

கருத்துரையிடுக Disqus

 
Top