0

 
ஹீரோ  எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி  ஒரு வேலை இல்லா பட்டதாரி . எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி  அவரோட அப்பா எப்போ பாரு அவரை தண்டச்சோறு , தண்ட டிஃபன் , தண்ட டின்னர் அப்டி-னு திட்டிட்டே  இருக்காரு . எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி  அவரோட அம்மா அவருக்கு சப்போர்ட். பொதுவாவே அரசியல் வாழ்க்கைலயும் சரி , குடும்ப வாழ்க்கைல யும் சரி அம்மா சப்போர்ட் இருந்தாவே  போதும் . வாழ்க்கை பிரகாஷ மயம் தான் . 
ஹீரோவோட  தம்பி  எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி   வேலைக்குப்போய்  கார் எல்லாம் வாங்கி  ஹீரோவை வெறுப்பேத்துறார் .  எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி  ஹீரோவுக்கு பக்கத்து  வீட்டில்  ஒரு ஃபிகர் . இது வரை  ஏனோ தானோ -னு பார்த்துட்டு  இருந்த தமிழன் இப்பொ தான்  நிமிர்ந்து உக்கார்றான் . 
 ஹீரோ  டப்பாவான  ஒரு லூனா மாதிரி வண்டியை வெச்சுக்கிட்டு அந்த பக் வீட்  ஃபிகரை எப்படி  ரூட்  விடறார் என்பதே  முதல் பாதி கதையை இழுக்க போதுமான தா  இருக்கு 
  திடீர் -னு ஒரு  ட்விஸ்ட் . ஹீரோவோட அம்மா  அவுட் . அந்த வேலை  ஹீரோவுக்குக்கிடைக்குது . இஞ்சினியர் ஆனதும் அங்கே  ஒரு வில்லன் வர்றான் . அந்த  வில்லனால் ஏற்படும் தடங்கலை   ஹீரோ எப்படி  முறியடிக்கிறார் ? என்பதே  மிச்ச மீதிக்கதை

கருத்துரையிடுக Disqus

 
Top