0


கத்தரிக்காய்


கத்தரி செடியின் ஆயுள் காலம்  சுமார் 150 நாட்கள். இது செடியின் ரகத்தை பொறுத்து  சில நாட்கள் வித்தியாசப்படும். 

தயார் செய்த மண் கலவையை,  டிரே அல்லது பிளாஸ்டிக் கேன் தொட்டியில் மூன்றில் இரண்டு பங்கு நிரப்ப வேண்டும். அதன் பின் விரலால் அரை அங்குலம் பள்ளம் ஏற்படும் வகையில் நீட்டு வசத்தில் கோடு போட வேண்டும். ஒரு கோட்டுக்கும் அடுத்த கோட்டுக்கும்  இரண்டு அங்குல இடைவெளி இருக்குமாறு கோடுகளை போட வேண்டும். அதன் பின் அந்த பள்ளத்தில்  இடைவெளி விட்டு கத்தரி விதைகளை ஒன்றிரண்டாக தூவ வேண்டும். பின் பள்ளத்தின் இருபக்கம் இருக்கும் மண்ணால் மூடி சமப்படுத்த வேண்டும். 

 காய்கறி தோட்டத்தில் கத்தரி பயிர் செய்யும் சிறு விவசாயி, சிறு அளவிலான  விதை படுக்கையை தயார் செய்து அதில் விதைப்பு செய்ய விரலால் பள்ளமாக்குவதை கீழே உள்ள படம் காட்டுகிறது.


அதன்பின்பு அந்த பள்ளத்தில் விதையை பரவலாக துவுவதை கீழே உள்ள படம் காட்டுகிறது.


விதை தூவப்பட்ட பின் மண்ணால் விதைகள் மூடப்படுவதை கீழே உளள படம் காட்டுகிறது.

அதன் பின் விதை முளைப்பதற்கு தேவையான ஈரப்பதம் மண்ணில் இருக்கும் வகையில் தினமும், விதை வெளியே வந்து விடாதபடி கவனமாக  பூவாளி மூலம்  தண்ணீர் தெளிக்க வேண்டும்.

ஒரு சில நாட்களில் விதை முளைத்து செடி வெளியே தெரியும். கிட்டத்தட்ட 30-35 நாட்களில்  மூன்று அல்லது நான்கு இலைகள் கொண்ட நாற்றாக வளர்ந்து விடும். அச்சமயம், அதன் வேர்கள் அறுந்து விடாதபடி கவனமாக பிடுங்கி  ஒரு தொட்டிக்கு ஒரு செடி வீதம் நட வேண்டும். இதை கீழே உள்ள படத்தில் காட்டிய படி பிளாஸ்டிக் கோணியிலும் வளர்க்கலாம்.


நாற்று நட்ட 40-45 நாட்களில்  நன்கு வளர்ந்த செடியாகி பூக்க ஆரம்பிக்கும். பூவின் படம் கீழே காட்டப்பட்டுள்ளது.

 அதன் பின் பூ காயாக மாறும்.  சுமார் இரண்டரை மாதம் காய் காய்க்கும். 

பூ பூக்கவும் அது காயாக மாறவும் அதற்கு தேவையான சத்தை கொடுக்கும் வகையில் வாரம் ஒரு முறை மக்கிய கம்போஸ்ட், மண்புழு உரம் ஆகியவற்றை போட்டு மண்ணை கிளறி விடவேண்டும்.  பூச்சி, புழுதாக்குதல் ஏற்படாமலிருக்க  முன் பதிவில் கூறியபடி வேப்பெண்ணை கரைசலை தெளிக்க வேண்டும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்க்கள் கணக்கு உத்தேசமானதே. விதையின் ரகம் இனம் ஆகியவற்றிற்கு ஏற்ப நாட்கள் வித்தியாசப்படும்.

கருத்துரையிடுக Disqus

 
Top