பண்டிகை என்றாலே பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும். அதிலும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையில் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் இந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டில் கேதார கௌரி விரதத்தை மக்கள் மேற்கொள்வர். இந்த விரதமானது 21 நாட்கள் கடைபிடிக்கப்படும்.
ஆனால் தற்போது இந்த விரதத்தை அனைவராலும் 21 நாட்கள் கடைப்பிடிக்க முடியாத காரணத்தினால், அமாவாசை அன்று வரும் தீபாவளி அன்று முடியும் அந்த விரதத்திற்கு மக்கள் பல இனிப்புகள் மற்றும் காரங்களை செய்து, அம்மனுக்கு படைத்து வணங்குவர்.

அதிலும் அந்த பூஜையில் வைக்கும் பலகாரங்கள் ஒவ்வொன்றையும் 21 ஆக வைத்து பூஜை செய்வர். இதனால் அந்த பூஜைக்கு என்ன பலகாரங்கள் செய்வது என்று தெரியாமல் இருந்தால், இங்கு ஒரு  ஈஸியான இனிப்புகளை கொடுத்துள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, இந்த இனிப்புகளை செய்து பூஜை செய்து சாப்பிட்டு, பட்டாசுகளை வெடித்து, இனிமையாக தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.

குல்பி பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஏன் பண்டிகை என்றால் இனிப்புகள் மட்டும் தான் செய்ய வேண்டுமா என்ன? ஐஸ் அல்லது குல்பியெல்லாம் செய்யக்கூடாதா என்ன? ஆகவே இந்த தீபாவளிக்கு வித்தியாசமாக குல்பியை செய்யலாமா? அதன் செய்முறையை தெரிந்து கொள்ள,
Kesar Kulfi An Indian Dessert
ஐஸ் க்ரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் குல்பி என்றால் சொல்லவே வேண்டாம். இத்தகைய குல்பியை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதிலும் பொதுவாக அனைவருக்கும் பிஸ்தா ஃப்ளேவர் தான் பிடிக்கும். இப்போது அந்த பிஸ்தா ஃப்ளேவரில் கேசார் குல்பியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 2 கப்

ஏலக்காய் - 1 சிட்டிகை

க்ரீம் - 1-2 கப்

கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்

கேசார் - 1-2 சிட்டிகை

பிஸ்தா - 1/4 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)

செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு, நன்கு கொதிக்க விட்டு, பின் தீயை குறைவில் வைத்து, பால் பாதியாக சுண்டும் வரை நன்குகொதிக்க விட வேண்டும்.

பின்னர் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

இப்போது அதில் க்ரீம் மற்றும் கண்டென்ட்ஸ்டு மில்க்கை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கலக்க வேண்டும்.

பின்னர் அதோடு கேசாரை சேர்த்து, 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் நறுக்கிய பிஸ்தாவை போட்டு, இறக்கிவிட வேண்டும்.

பின் அதனை குளிர வைத்து, ஐஸ் க்ரீம் கப்-களில் ஊற்றி, மூடி போட்டு குச்சிகளை அதனுள் நுழைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
பிறகு அதனை மறுநாள் எடுத்து சாப்பிடலாம். இப்போது சூப்பரான கேசார் குல்பி ரெடி!!!

குறிப்பு: முக்கியமாக இந்த குல்பியை முதல் நாள் இரவில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, மறுநாள் எடுத்து சாப்பிட அருமையாக இருக்கும்.
 
Top