0
Nostradamus உலகின் தலை சிறந்த தீர்க்க  தரிசியாக  புகழ் பெற்றவர் இவர் தனது ஆரூடங்களை செய்யுள்களாக தனது தி சென்டுரிஸ் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அதில் உலகத்தின் முடிவுவரை கூறி உள்ளார்
இவர் தனது நூலில் ஹிட்லர் ,முசோலினி ,முதலாம் எலிசபெத் ,கென்னடி சகோதரர்களின் படுகொலை ட்வின் tower அளித்தால் போன்ற பல தீர்க்க தரிசனங்களை முன்கூட்டியே தெரிவித்தவர்



Nostradamus's house at Salon-de-Provence, as reconstructed after the 1909 Lambesc earthquake
 இவரது இயற் பெயர் Michel de Nostredame பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர் இவர் ஒரு யூதர் ஜாக்ஸ் ,ரெயினி என்பவர்களுக்கு 1503 dec 14 இல் பிறந்தார் ஜீன் என்பவரிடம் தனது ஆரம்பக்கல்வியை கற்றார் அவரது மதினுட்பத்தில் மயங்கிய ஜீன் அவருக்கு கணிதம் கிரேக்கம் ஹிப்ரு இவற்றுடன் ஜோதிடத்தையும் கற்றுக்கொடுத்தார் 

1519 இல் தனது 15 வதுவயத்தில் Avignon பல்கலைகழகம் சென்றார்   அங்கு இவர்  grammar,logic, rhetoric,geometry,arithmetic,astronomy போன்றவற்றை கற்றார்  பின்பு அங்கிருந்து வெளியேறி 8 வருடங்கள் கிராமம் கிராமமாக  சென்று மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் இவரது ஜோதிடக்கலை மீதான ஆர்வத்தால் கவலை அடைந்த பெற்றோர் 

மருத்துவக்கல்விக்காக இவரைப்பணித்தனர் இதனால் இவர் university of montpellier இல் சேர்ந்தார் அங்குள்ள நூலகத்திலே தனது பலமணி நேரங்களை   செலவிட்டார்  அங்கு அவர்  வாசித்த புத்தகங்கள்தான் அவரை ஜோதிடம் நோக்கி வெகுவாக  திருப்பியது இவர் முதலில் அங்கு படித்தநூல் "FAELMOS-DE MYSTERIES AEGYPTORIUM"  இதன் மூலம்தான் வரும் பொருள் உரைத்தல் முறையை உருவாக்கிக்கொண்டார் 

பின் அங்கிருந்து மருத்துவராக வெளியேறி பின் யூத ரசவதிகளிடம் ஜோதிடம் கற்றார் 

மருத்துவராக வெளியேறி சிகிச்சை அளித்தார் தனது சொந்த போர்முலாக்கள் மூலமே சிகிச்சை   அளித்தார் டாக்டர்ரேட் பட்டம் பெற்றார் 

அவரது விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார் 2 குழந்தைகளுக்கு தந்தையானார் 
 
இந்த  மகிழ்ச்சியெல்லாம் வெறும்  3  வருடங்களே நீடித்தது ப்ளேக் நோயினால் அவரது மனைவி குழந்தைகளை இழந்தார் ஒரு பிரபல வைத்தியராக இருந்துகொண்டு தனது சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாமல் போனது அவருக்கு மிகுந்த வேதனையை அளித்தது 
    
இதன் பின்னர் யாரும் இவரிடம் வைத்தியத்திற்கு செல்லவில்லை

ஹிட்லர் ,டயானாவின் மரணங்களின் போது வீரகேசரியில் ...



இவர் எவ்வாறு எதிர்காலத்தை கணித்தார் தெரியுமா ?
நள்ளிரவில் நிசப்தமான நேரம் செப்புத்தகடு போர்த்திய ஆசனத்தில் அமர்ந்து நீர் நிரம்பிய முக்காலி ஒன்றை முன்னே வைக்கிறார் அந்நீர் தெளிவற்றதாகும்வரை பார்க்கிறார் அதில் எதிர்கால நிகழ்வுகள் இவருக்கு  சலனப்படங்களாக தோன்றுகிறது ..பின்னர் அவற்றை குறிச் சொற்களுடன் பாடல் வடிவில் எழுதுகின்றார் ...
ஹிட்லர் ...

வரலாற்றில் ஹிட்லர் என்னும் பெயர் சற்று தடித்த எழுத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது எனவே ஹிட்லரை இவர் கருத்தில் கொண்டதில் ஆச்சரியம் இல்லை 
மிருகங்கள் மிகுந்த பசியுடன் ஆற்றைக் கடக்கின்றன ...போர்க்களத்தில் ஹிட்லருக்கு பாதகமாகவே இருக்கும் ..ஜேர்மனிய குமரன் சட்டத்தை அறிய மாட்டன் சிறப்பு மிக்க ஒருவனை கூண்டில் அடைப்பான் 


"Beasts ferocious from hunger will swim across rivers:  
The greater part of the region will be against the Hister,  
The great one will cause it to be dragged in an iron cage,  
When the German child will observe nothing. "
இதைவிட நொஸ்ரதாமஸ் ஹிட்லரின் பெயரை முன்பே அண்ணளவாக எடுத்துக்கூறி விட்டார் "Hister"
இங்கு ஜேர்மனிய குமரன் =ஹிட்லர்


அந்த மனிதன் Nuremberg  Augsburg பஸ்லே பகுதிகளைக் கைப்பற்றுகிறான் கொலோனில் இருந்து பிராங்க்பர்ட்டை அவன் மீண்டும் எடுத்துக்கொண்டு விடுகிறான் Flanders வழியே பிரான்ஸ்சுக்கு போகின்றான் 


When the greatest one will carry off the prize  
Of Nuremberg, of Augsburg, and those of Bвle  
Through Cologne the chief Frankfort retaken  
They will cross through Flanders right into Gaul. 


ரோமின் அதிகாரம் வீழ்ச்சியடையும் பலம் பொருந்திய அண்டை நாட்டுக்காரன் அங்கெ கால் வைப்பான் மறைமுக வெறுப்பும் உள்ளநாட்டு பிரச்சனைகளும் அந்த கோமாளிகளின் முட்டாள்தனமான காரியங்களை தாமதப் படுத்தும் 

"The Roman power will be thoroughly abased,  
Following in the footsteps of its great neighbour:  
Hidden civil hatreds and debates  
Will delay their follies for the buffoons." 


முசோலினி இத்தாலியை ஆண்ட பொழுது ஜெர்மனிதான் பலம் பொருந்திய நாடு முசோலினி ஹிட்லரை பின்பற்றியவன் 
அவர்களின் ஆரிய புனிதம் உலக ஆதிக்கம் ஆகிய இரண்டுமே முட்டாள் தனமானவை  இதனால் இவர்களை கோமாளிகள் என்கிறார்

முற்றுகை இடப்பட்டவர்களின் துப்பாக்கி மற்றும் வெடி மருந்தால் மூடப்பட்டிருக்கின்றது துரோகிகள் உயிரோடு சமாதியடைவர்கள்



The fortresses of the besieged shut up,  
Through gunpowder sunk into the abyss:  
The traitors will all be stowed away alive,  
Never did such a pitiful schism happen to the Saxons. 

செய்யுளில் saxons என்ற வார்த்தை இருக்கின்றது இது ஜேர்மனியரை குறிக்கின்றது ஹிட்லர் (தற் கொலை)அவருடைய சகாக்கள் பதுங்கு குழியில் இறந்து விடுவார்கள் அனால் நேச நாடுகளின் குண்டு வீச்சுக்கு இலக்காகிறார்கள் 

ஆண்மையுள்ள பெண்ணொருத்தியால் வடக்குப் பகுதி சிரமப்படும் ஐரோப்பாவும் உலகமும் சினமடையும் ஹங்கேரியில் வாழ்வா சாவா என்ற நிலை ஏற்படும் 
Great exertions towards the North by a mannish women 
to vex Europe and almost all the Universe.  
The two eclipses will be put into such a rout  
that they will reinforce life or death for the Hungarians. 

இங்கு ஜெர்மனி விரிவடைவதைப் பற்றி நொஸ்ரடாமஸ் குறிப்பிடுகின்றார் 
ஆண்மைத்தனமுள்ள பெண் "mannish women " என்பது germina வைக் குறிக்கும்

நொஸ்ரடாமஸ் தனது மகன் சீசர்ருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் கடிதத்தினூடாக அதுவும் சங்கேத வார்த்தைகளினூடாக எச்சரித்திருந்தார் ..
தனது தந்தையின் பெயரை தவறாக பயன்படுத்த முயற்சி செய்வாய் ஆனால் அது உனக்கு நன்மை பயக்காது ஆனால் மகன் அதை அலட்சியப்படுத்திவிட்டார் தனது தந்தையைப் போலவே எதிர்வுகூறவேண்டும் என்ற ஆசையில் விவாரிஸ் நகரம் அழியப்போகின்றது என்று கூறிவிட்டார் மூன்று நாட்களில் அழிந்துவிடும் என்று கூறினார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை பின்னர் இவரே நகருக்கு தீ வைக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டு படையினரால் கொல்லப்பட்டார் 

1982 இல் இத்தாலியின் பிரபல பத்திரிகையாசிரியர் Enza Massa என்பவர் ரோமில் உள்ள  Italian National Library யில் தவறுதலாக ஒரு புத்தகத்தைக் கண்டு பிடித்தார் அதில் Nostradamus Vatinicia Code.என தலைப்பிடப் பட்டிருந்தது இது 13 - 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இது 80 க்கும் மேற்பட்ட வேட்டர் கலர் வரைபடங்களைக் கொண்டது இது நொஸ்ரடாமஸ்சின் மகனான César de Nostredame ஆல் ரோமிற்கு வழங்கப்பட்டது இது நொஸ்ரடாமஸ்சால் எழுதப்படவோ வரையப்படவோ இல்லை அவரது மகனால் அவரது எதிர்வுகூறல்களை விளக்குவதற்காக வரையப்பட்டவை இது நொஸ்ரடாமஸ் மறைந்த பின்னர்தான் வெளியிடப்பட்டது அவர் 1566 இல் மறைந்து விட்டார் இதில் 1629 என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது இதில் உள்ள வரை படங்கள் யாவும் டாவின்சி யின் படங்களைப் போல ஒவ்வொரு  காரணத்தை மறை முகமாகக் கூறுபவை இந்தப் படங்கள் நொஸ்ரடாமஸ்சின் எதிர்காலத்தை பற்றிய எதிர்வு கூறல்களை படங்கள் வாயிலாக கூறுபவை எனவே இதுவும் ஒவ்வொருவரின் விளங்கும் தன்மைக்கேற்ப பலவாறு விளங்கிக்கொள்ளப்படுகின்றது .


அதில் வரையப்பட்ட ஓவியங்கள் 













































அரிய ஓவியங்கள் அடங்கிய வீடியோ  
 
கென்னடி சகோதரர்களின் கொலை...
ஜோன் கென்னடி அமெரிக்காவின் 35 ஆவது ஜனாதிபதி.Dealey Plaza ற்கு செல்லும் வழியில் சுடப்பட்டு இறந்தார் கென்னடி.இரண்டுதடவைகள் சுடப்பட்டார் .
முதலாவது குண்டு கென்னடியின் குரல்வளையினூடு சென்றபொழுது அவர் தன் இடது கரத்தை தன் குரல்வளையை நோக்கி கொண்டு செல்லப்பட்டபோது எடுக்கப்பட்டது.
இரண்டாவதுதடவை சுடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
என்று குறிப்பிடப்ப்டுமிடத்தில் இருந்துதான் கென்னடி சுடப்பட்டார்.
செஞ்சுரியில் நோஸ்ரடாம் கூறியது
The great man will be struck down in the day by a thunderbolt.  
An evil deed, foretold by the beare of a petition.  
According to the prediction another falls at night time.  
Conflict at Reims, London, and pestilence in Tuscany.(1.26)

புகழ்பெற்ற மனிதன் ஒருவன் பகல்பொழுதில் ஓர் இடிமின்னல் தாக்கிவிழுவான்.(இங்கே இடிமின்னல் என குறிப்பிடப்படுவது துப்பாக்கிக்குண்டு) தீயவனால் இது அரங்கேறும்.இன்னொரு மரணம் இரவில் நடைபெறும்.
இன்னோர் மரணம் எனக்குறிப்பிடப்படுவது ஜோன் கென்னடியின் சகோதரனான  ரொபேர்ட் கென்னடியின் மரணத்தை இவர் 1968 ஜூன் 5 இல் நடு இரவுல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் சுடப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள்.
Before the conflict the great wall will fall,  
The great one to death, death too sudden and lamented,  
Born imperfect: the greater part will swim:  
Near the river the land stained with blood. (2.57)

பிரச்சனைக்குரிய பெரியசுவர் வீழ்வதற்கு முன்பே அந்த பெரிய மனிதன் வீழ்ந்துவிடுவான்.அவனுடைய மரணம் சடுதியாக நிகழும்.குறைகளுடனேயே பிறப்பான்.ஆற்றின் கரை அருகே இரத்தக்கறை படியும்.
பிரச்சனைக்குரிய பெரியசுவர்  வரலாற்றின் முக்கிய சுவர் அதுதான் அது பேர்லின் சுவர் இது கட்டப்பட்டது 1961 இல் உடைக்கப்பட்டது 1989 இல்.
இது உடைக்கப்படுவதற்கு முன்பாக இவர் கொல்லப்பட்டார்.
Those at ease will suddenly be cast down,  
the world put into trouble by three brothers;  
their enemies will seize the marine city,  
hunger, fire, blood, plague, all evils doubled. 

நிம்மதிகள் மறைந்துபோகும். மூன்று சகோதரர்களால் உலகம் துன்பப்படும்.

 துறைமுக நகரம் எதிரிகளால் சூழப்படும். பசி பஞ்சம் எல்லாமே உலகில் 

பெருகிவிடும்.



கென்னடியுடன் சேர்த்து மொத்தமாக 4 பேர்.4 வருமே இறந்துவிட்டார்கள் அண்மையுல் இறந்தவர் டெட் கென்னடி இவர் பிரேயின் டியூமரினால் இறந்தார்.மற்ற சகோதரரான  ஜோசப் கென்னடி உலகயுத்தத்தில் பங்குபற்றியபோது இறந்துவிட்டார்.ஆக இயற்கையாக மரணமடைந்தவர் ஒரே ஒருவர் மட்டுமே.
A great King taken by the hands of a young man,  
Not far from Easter confusion knife thrust:  
Everlasting captive times what lightning on the top,  
When three brothers will wound each other and murder. 

ஒரு சிறந்த அரசன் இளைஞனின் கைகளில் சிக்குகிறான்.ஈஸ்ரர் பண்டிகை வெகு நாட்தொலைவில் இல்லை.உயர்ந்த இடத்தில் தோன்றிய மின்னல் மூவரையும் பழிவாங்குகின்றது.


அடுத்து நொஸ்ரடாமஸ் கூறியது லூயிஸ்பாஸ்டரைப்பற்றி....


The lost thing is discovered, hidden for many centuries.  

Pasteur will be celebrated almost as a god-like figure.  
This is when the moon completes her great cycle,  

he will be dishonored by other winds


பல நூற்றாண்டுகாலம் மறைந்திருந்த விடயம் கண்டுபிடிக்கப்படும்.பாஸ்ரர் கடவுளைப்போல் போற்றப்படுவார்.சந்திரன் தனது பெரிய சுழற்சியை முடித்துக்கொள்ளும்போது இது நடைபெறும்.ஆனால் வதந்திகள்மூலம்  அவர் அவமானப்படவேண்டிவரும்.

நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் லூயிஸ் பாஸ்டர் ஒரு வேதியலாளர். நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டு அவற்றை அறிமுகப்படுத்தியவர்.
மற்றபாடல்களைப்போல் அல்லாமல் நொஸ்ரடாமஸ் நேராகவே சம்மந்தப்பட்டவரை குறிப்பிட்டது இந்தப்பாடலில் மட்டும்தான்.ஃபிரஞ்சில் Pastor  என்று குறிப்பிட்டிருந்தார்.ஆங்கிலத்தில் பெயர்Pasteur அண்ணளவாக சரியாகிவிட்டது. July 6, 1885 ஒன்பது வயதான Joseph Meister என்ற விசர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதல்முதலில் இவரது விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசியை வழங்கும்போது இவர் பலத்த எதிர்ப்புக்குள்ளானார்.
 

கருத்துரையிடுக Disqus

 
Top