0

உங்கள் கணினி அடிக்கடி restart ஆகிறதா?, உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா? ஒரு வேலை உங்கள் கணினியின் வெப்பம் அதிகரிப்பதால் இருக்கலாம்.

அதற்கு இந்த மென்பொருள் கண்டிப்பாக உதவும்.


உங்கள் கணினியின் அனைத்து பாகங்களின் வெப்ப அளவினையும் அறிந்து கொள்வதுடன் fan ஓடும் வேகத்தினை மாற்றவும் உதவுகிறது.

மற்றவற்றை போல் அல்லாமல் இவை hard-disk மற்றும் SCSI diskகளையும்
தொடர்பு கொண்டு அவற்றின் வெப்ப அளவினை நமக்கு காட்டுகின்றது.

இந்த மென்பொருள் motherboardகளில் இருக்கும் digital temperature sensors எனப்படும் வெப்ப உணரிகளின் மூலம் வெப்ப அளவினை கண்டுகொண்டு அதற்கேற்ற மாதிரி fanன் வேகத்தை மாற்றுகிறது.

எனவே உங்கள் cpuன் காபினட்டில் இருந்து வரும் சத்தம் குறைகிறது.

இது ப்ராசரில் உள்ள ஒவ்வொரு coreன் பயன்பாட்டையும், வெப்ப அளவையும் காட்டுகிறது.

இது அனைத்து Windows 9x, ME, NT, 2000, 2003, XP, Vista and Windows 7 போன்ற அனைத்து இயங்குதளங்களையும் ஆதரிக்கிறது. மேலும் இவை
64-bit இயங்குதளத்திலும் பிரச்சனையின்றி செயலாற்றும்.

இது ஒரு இலவச மென்பொருள். மேலும் அறிய
http://www.almico.com/speedfan.php

தரவிறக்க
http://www.almico.com/sfdownload.php

கருத்துரையிடுக Disqus

 
Top